ஈரானில் சுகாதார பராமரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரானில் சுகாதார பராமரிப்பு (ஆங்கிலம்: Healthcare in Iran) என்பது பொது-அரசு அமைப்பு, தனியார் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகிய மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டது. ஈரானில் சுகாதார மற்றும் மருத்துவத் துறையின் சந்தை மதிப்பு 2002 இல் கிட்டத்தட்ட 24 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2017 ஆம் ஆண்டில் 96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.[1]

80 மில்லியன் (2017) மக்கள்தொகை கொண்ட ஈரான் மேற்கு ஆசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். பிராந்தியத்தில் உள்ள பிற இளம் மக்கள் தொகையினை கொண்ட நாடுகளின் பொதுவான பிரச்சினையை ஈரானும் எதிர்கொள்கிறது. புதிய குடும்பங்களைத் தொடங்குவதற்குள் இளைஞர்கள் விரைவில் வயதாகிவிடுவார்கள். இது மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கிறது. பின்னர் பொது சுகாதார உள்கட்டமைப்புகள் மற்றும் சேவைகளின் தேவையையும் அதிகரிக்கிறது.[2]

மொத்த சுகாதார செலவு 2017 இல் ஈரானில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்திற்கு சமமாக இருந்தது. சுமார் 90 சதவீத ஈரானியர்கள் சில வகையான சுகாதார காப்பீட்டைக் கொண்டுள்ளனர்.[3] சட்டபூர்வ உடலுறுப்பு தானம் அளிப்பதில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஈரான் மட்டுமே. ஆனால் இவ்வகை உறுப்பு நன்கொடை என்பது இலவசமாவே அங்கு கருதப்படுகிறது.

புள்ளி விவரம்[தொகு]

உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, 2000 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஈரான் சுகாதாரத்துறையில் 58வது இடமும் சுகாதார அமைப்பு செயல்திறனில் 93 வது இடத்திலும் உள்ளது.[4] 2016 ஆம் ஆண்டில், "புளூம்பெர்க் நியூஸ்" ஈரானை அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை விட 30 வது இடத்தில் வைக்கிறது.[5]

பிறப்பு விகிதம்[தொகு]

ஈரானில் சராசரி ஆயுட்காலம் 75.5 ஆண்டுகள் என்றும், சுகாதாரத்துக்கான தனிநபர் செலவு 346 டாலர் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடந்த இருபதாண்டுகளாக ஈரானியர்களின் சுகாதார நிலை நன்கு மேம்பட்டுள்ளது. விரிவான ஆரம்ப சுகாதார வலையமைப்பை நிறுவுவதன் மூலம் ஈரான் பொது சுகாதார தடுப்பு சேவைகளை விரிவுபடுத்த முடிந்தது. இதன் விளைவாக, குழந்தை மற்றும் தாயின் இறப்பு விகிதங்கள் கணிசமாகக் குறைந்துவிட்டன. மேலும் பிறக்கும் குழந்தையின் ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தை மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு முறையே 1,000 எனவும் நேரடி பிறப்புகளில் 28.6 மற்றும் 35.6 எனவும் குறைந்துள்ளது.[6] குழந்தைகளின் நோய்த்தடுப்பு மருந்துகள் பெரும்பாலான நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு அணுகக்கூடிய அளவில் உள்ளது [7]

சுகாதார சேவைகள்[தொகு]

ஈரானில் பல் பராமரிப்பு வசதி

நாட்டின் மிகப் பெரிய சுகாதார விநியோக வலையமைப்பினை ஈரானின் சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சகம் கொண்டுள்ளது. மேலும் அதன் சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருத்துவ பள்ளிகள் இந்த வலையமைப்பு மூலம் இயங்குகிறது. மருத்துவ காப்பீடு, மருத்துவக் கல்வி, நாட்டில் சுகாதார அமைப்பின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை, கொள்கை வகுத்தல், மருந்துகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் சுகாதார சேவைகளை வழங்குவதற்கான பொறுப்பில் சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சகம் உள்ளது. கூடுதலாக, மருத்துவ சேவைகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற பிற இணையான அமைப்புகளும் உள்ளன, அவை நிவாரண அடித்தளமாகவும் காப்பீட்டு நிறுவனமாகவும் செயல்பட நிறுவப்பட்டுள்ளன. குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைகளுக்கான "மஹாக்" போன்ற சில மருத்துவமனைகள் சில தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

முழு பாதுகாப்பு[தொகு]

அரசாங்கப் பணியாளர்களைத் தவிர்த்து, நகர்ப்புறங்களில் பணிபுரியும் குடிமக்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் காப்பீடு செய்ய சமூக பாதுகாப்பு அமைப்பு என்ற ஒரு அமைப்பு பொறுப்பேற்கிறது. இதன் மூலம் சம்பளம் மற்றும் கூலித் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாக்கப்படுகிறார்கள். சுயதொழில் செய்பவர்கள் தானாக முன்வந்து இத்திட்டத்தில் சேருகிறார்கள். இது பல வயதான ஓய்வூதியதாரர்களுக்கும் காப்பீடு வழங்குகிறது. மருத்துவ சேவை காப்பீட்டு அமைப்பு என்பது அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களையும் உள்ளடக்கியது. 'இமாம் கொமேனி நிவாரண அறக்கட்டளை காப்பீட்டுத் திட்டங்களில் சேராத ஏழைகளுக்கும் காப்பீடு செய்கிறது. அதே நேரத்தில் இராணுவப் பணியாளர் காப்பீட்டு அமைப்பு ஆயுதப்படைகளின் உறுப்பினர்களுக்கு சுகாதார காப்பீட்டை வழங்குகிறது. இந்த திட்டங்களுக்கு அப்பால், சமூகத்தின் அதிக வசதியான உறுப்பினர்களை உள்ளடக்கிய பல தனியார் மற்றும் பொது காப்பீட்டு திட்டங்களும் உள்ளன.[3]

குறிப்புகள்[தொகு]

  1. Health services and pharmaceuticals to Iran - For Australian exporters - Austrade பரணிடப்பட்டது சனவரி 5, 2009 at the வந்தவழி இயந்திரம்
  2. "Iran Pharmaceuticals and Healthcare Report Q2". Payvand.com. 2009-03-25. Archived from the original on 2011-11-29. பார்க்கப்பட்ட நாள் 2012-02-05.
  3. 3.0 3.1 "Archived copy". Archived from the original on 2016-08-17. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. WHO, உலக சுகாதார அமைப்பு. "The World Health Report 2000" (PDF). Archived from the original (PDF) on 2006-10-18. பார்க்கப்பட்ட நாள் 2006-10-12. {{cite web}}: Check |first= value (help)
  5. "U.S. Health-Care System Ranks as One of the Least-Efficient". 29 September 2016. Archived from the original on 13 April 2018. பார்க்கப்பட்ட நாள் 26 April 2018 – via www.bloomberg.com.
  6. "At a glance: Iran (Islamic Republic of) - The big picture". UNICEF. Archived from the original on 2012-02-05. பார்க்கப்பட்ட நாள் 2012-02-05.
  7. Iran: Healthcare and Pharmaceuticals Forecast.