உள்ளடக்கத்துக்குச் செல்

இல்லிப்பூச்சி (பேரினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இல்லிப்பூச்சி
பெண் இல்லிப்பூச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலாக்கோஸ்ட்ராக்கா
வரிசை:
குடும்பம்:
ஹிப்பிடே
பேரினம்:
எமரிட்டா

Scopoli, 1777 [1]
மாதிரி இனம்
கேன்சர் எமரிட்டசு
லின்னேயஸ், 1767 [2]

இல்லிப்பூச்சி (Emerita) என்பது பத்ததுக்காலி ஓடுடைய கணுக்காலிகளில் ஒரு சிறிய இனமாகும். இது தமிழில் ஆழிப்பூச்சி, ஆளிப்பூச்சி, மச்ச நண்டு, கடல் எலி, உறல், பொத்திப்பூச்சி என்றும் கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில் ஆமைப்பூச்சி, உறை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிறிய விலங்குகள் கடற்கரையில் அலைமோதும் மணலில் புதைந்து வாழ்கின்றன. இவை உணர்கொம்புகளைப் பயன்படுத்தி வடிகட்டி உண்கின்றன.[3] [4]

விளக்கம்

[தொகு]

இல்லிப்பூச்சி பீப்பாய் வடிவ உடலைக் கொண்டுள்ளது. இதன் உடல் கடினமான ஒரு புறவன்கூட்டைக் கொண்டுள்ளது. இது அலைகளில் உருண்டு செல்லுமாறு உள்ளது. [5] இது இறகு உணர்கொம்பைக் கொண்டுள்ளது. இவறின் மூலமாக கடல் அலைகளில் வரும் மிதவைவாழி மற்றும் சிதைவுகளை வடிகட்டி உணவாக்கிக்கொள்கிறது.

ஆண் இல்லிப்பூச்சிகள் பொதுவாக பெண் இல்லிப்பூச்சிகளைவிட சிறியவை. பெண் இல்லிப்பூச்சிகளின் மேலோட்டு நீளம் சுமார் 8–37 mm (0.31–1.46 அங்) என இருக்கும் இனங்களைப் பொறுத்து, ஆண் இல்லிப்பூச்சிகளும், பெண் இல்லிப்பூச்சிகளும் ஒத்த அளவிலிருந்து 2.5 mm (0.098 அங்) வரை நீளத்தில் வேறுபடுகின்றன. [6]

பரவல்

[தொகு]

ஒட்டுமொத்தமாக இந்த உயிரினமானது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் பரந்த அளிவில் காணப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான உள்ளினங்கள் தனிப்பட்ட இனங்களாக சிறிய பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த உள்ளினங்கள் வாழும்பகுதிகள் அரிதாகவே ஒன்றுடன் ஒன்று ஒட்டியுள்ளன. [7] அமெரிக்காவின் இரு கடற்கரையிலும் ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையிலும் இந்த இனம் பொதுவான வகையாகும். ஹிப்பா தொடர்பான இனம் ஆத்திரேலியா உட்பட இந்தோ-பசிபிக் முழுவதும் காணப்படுகிறது.

இனங்கள்

[தொகு]

பத்து இனங்கள் 2019 ஆம் ஆண்டு வரை அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[Note 1][2]

  • எமரிட்டா அனலோகா (ஸ்டிம்ப்சன், 1857) - மேற்கு வட அமெரிக்கா மற்றும் மேற்கு தென் அமெரிக்கா
  • எமெரிடா ஆஸ்ட்ரோஆஃப்ரிகானா ஷ்மிட், 1937 - தென்கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர்
  • எமெரிடா பெனடிக்டி ஷ்மிட், 1935 - மெக்சிகோ வளைகுடா
  • எமெரிடா பிரேசிலென்சிஸ் ஷ்மிட், 1935 - தென்கிழக்கு பிரேசில் மற்றும் வடகிழக்கு பிரேசில்
  • எமெரிடா எமரிட்டஸ் (லின்னேயஸ், 1767) - தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா
  • எமெரிடா ஹோல்டுசி சங்கோலி, 1965 - மேற்கு இந்தியா, பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல்
  • எமெரிட்டா கராச்சென்சிஸ் நியாஸி & ஹக், 1974 - பாகிஸ்தான்
  • எமரிட்டா போர்டோரிசென்சிஸ் ஷ்மிட், 1935 - கரீபியன் கடல்
  • எமெரிடா ரத்புனே ஷ்மிட், 1935 - மேற்கு மத்திய அமெரிக்கா
  • எமெரிடா டால்பாய்டா (சே, 1817) - கிழக்கு வட அமெரிக்கா
  • எமெரிடா ஆசியாடிகா (எச். மில்னே எட்வர்ட்ஸ், 1837) - தென்னிந்தியா

மனிதர்களுடனான உறவு

[தொகு]

மீனவர்கள் இல்லிப்பூச்சியை தூண்டில் உணவாக பயன்படுத்துவது உண்டு. சில பண்பாடுகளில், தாய்லாந்து மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் இல்லிப்பூச்சிகள் பிரபலமான சிற்றுண்டியாக உண்ணப்படுகின்றன. இவை பெரும்பாலும் வறுவலாக்கபட்டோ, பொறித்தோ உண்ணபடுகின்றன. இதன் சுவை பெரும்பாலும் இறால் மற்றும் நண்டுக்கு இடையில் இருப்பதாக விவரிக்கப்படுகிறது.

வாழ்க்கைச் சுழற்சி

[தொகு]
ஒரு பெண் இல்லிப்பூச்சியின் அடிப்பகுதியில் உள்ள முட்டைகள்

இல்லிப்பூச்சி குறுகிய ஆயுட்காலம் கொண்டது, இவை இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியனவாக இல்லை. இவை முதல் ஆண்டு காலத்திலேயே இனப்பெருக்கம் செய்யக்கூடும். இவற்றின் பிரகாசமான ஆரஞ்சு நிற முட்டைகள், லார்வாக்களாக குஞ்சு பொரிக்கின்றன, இவை நான்கு மாதங்களுக்கும் மேலாக மிதவைவாழிகளாக வாழக்கூடும், மேலும் கடல் நீரோட்டங்களால் நீண்ட தொலைவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஆறு முதல் பதினொன்று வரை உயிரினங்களுக்கு இடையில் மண்டல நிலைகளின் எண்ணிக்கை வேறுபடுகிறது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Distributions follow Haye et al. (2003).[7]
  1. International Commission on Zoological Nomenclature (1963). "Opinion 643. Idotea Fabricius, 1798, and Mesidotea Richardson, 1905 (Crustacea, Decapoda); validation under the Plenary Powers". Bulletin of Zoological Nomenclature 20 (1): 18–25. http://biostor.org/reference/2147. 
  2. 2.0 2.1 2.2 Christopher B. Boyko; Patsy A. McLaughlin (2010). "Annotated checklist of anomuran decapod crustaceans of the world (exclusive of the Kiwaoidea and families Chirostylidae and Galatheidae of the Galatheoidea): Part IV – Hippoidea" (PDF). Zootaxa Suppl. 23: 109–129. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s23/s23rbz139-151.pdf. 
  3. Sand Fleas (Mole Crabs or Sand Crabs) Prime surf fishing bait
  4. http://www.baymoon.com/~ilga/crabs/ பரணிடப்பட்டது 2016-10-18 at the வந்தவழி இயந்திரம் All About Mole Crabs
  5. Ecology of Coastal Waters, with Implications for Management.
  6. T. Subramoniam (1981). "Protandric hermaphroditism in a mole crab, Emerita asiatica (Decapoda:Anomura)". Biological Bulletin 160 (1): 161–174. BIOSTOR 9638. http://www.biolbull.org/cgi/content/abstract/160/1/161. 
  7. 7.0 7.1 Pilar A. Haye; Yan K. Tam; Irv Kornfield (2002). "Molecular phylogenetics of mole crabs (Hippidae: Emerita)" (PDF). Journal of Crustacean Biology 22 (4): 903–915. doi:10.1651/0278-0372(2002)022[0903:MPOMHE]2.0.CO;2. http://digitalcommons.library.umaine.edu/cgi/viewcontent.cgi?article=1076&context=sms_facpub. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்லிப்பூச்சி_(பேரினம்)&oldid=3620072" இலிருந்து மீள்விக்கப்பட்டது