இலோகொஸ் சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலோகொஸ் சர்
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்இலோகொஸ் பிராந்தியம்
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)

இலோகொஸ் சர் (Ilocos Sur) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், இலோகொஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள நான்கு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் விகன் ஆகும். இம்மாகாணத்தில் 768 கிராமங்களும், 32 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரியான் லியுஸ் சிங்க்சன்ஸ் (Ryan Luis Singson) ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக இலோகொஸ் சுர் மாகாணத்தின் சனத்தொகை 689,668 ஆகும்.[2] இதன் மொத்த நிலப்பரப்பளவு 2,596 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 51ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 42ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக நான்கு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Provinces". PSGC Interactive (Makati City, Philippines: National Statistical Coordination Board) இம் மூலத்தில் இருந்து 11 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130111015112/http://www.nscb.gov.ph/activestats/psgc/listprov.asp. பார்த்த நாள்: 30 December 2013. 
  2. "Population of the provine" இம் மூலத்தில் இருந்து 2011-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110709064029/http://www.census.gov.ph/data/census2007/p000000.pd%66. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலோகொஸ்_சர்&oldid=3544597" இருந்து மீள்விக்கப்பட்டது