இலா பந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலா பந்த்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
10 மார்ச் 1998 – 26 ஏப்ரல்l 1999
முன்னையவர்நா. த. திவாரி
பின்னவர்நா. த. திவாரி
தொகுதிநைனித்தால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 மார்ச்சு 1938 (1938-03-10) (அகவை 86)
நைனித்தால், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கிருஷ்ண சந்திர பந்த்
பிள்ளைகள்2 மகன்கள்
கல்விஇளங்கலை
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி, சமூகப்பணி

இலா பந்த் (Ila Pant) (பிறப்பு 10 மார்ச் 1938) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், உத்தரப்பிரதேசத்தின் நைனித்தால் தொகுதியில் (இப்போது உத்தரகண்ட் பகுதியின் ஒரு பகுதி) பன்னிரெண்டாவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் முன்னாள் அமைச்சர் கே. சி. பந்த்தின் மனைவி..[1]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

மார்ச் 10, 1938இல் நைனிடாலில் (பின்னர் உத்தரப்பிரதேசத்தின் ஒரு பகுதி) இலா பந்த் பிறந்தார். இவர் ஷோபா மற்றும் கோவிந்த் பல்லப் பாண்டே ஆகியோரின் மகள். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். ஜூன் 20, 1957 அன்று, இவர் உத்தரகண்ட் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான கிருஷ்ண சந்திர பந்த் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[2]

அரசியல்[தொகு]

இலா பந்தின் மாமனார் கோவிந்த் வல்லப் பந்த் ஒரு மூத்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்தார். மேலும் இவரது கணவரும் அமைச்சராக இருந்தவர். இவர் 1998 இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.[3] நைனித்தால் தொகுதியில் 38.52% வாக்குகளைப் பெற்றார். 12 மே 2016 நடந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான நாராயண் தத் திவாரியை 15,557 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4]

1998-99 காலப்பகுதியில், இவர் வெளிவிவகாரக் குழுவின் உறுப்பினராகவும், வெளிவிவகார அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2]

இவர், பந்த் நகர் பல்கலைக்கழகத்தின் ஆளுநர் குழுவிலும், புது தில்லி ஜி. வி. பந்த் நினைவு அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

  1. "Electrion images: Ila Pant". India Today. 23 February 1998.
  2. 2.0 2.1 2.2 "Biographical Sketch of the Member of the 12th Lok Sabha". India Press. http://www.indiapress.org/election/archives/lok12/biodata/12up04.php. பார்த்த நாள்: 12 May 2016. 
  3. "Nainital Parliamentary Constituency". Election Commission of India. http://eci.nic.in/archive/GE2004/States/PartyCompWinner/S28/partycomp04.htm. பார்த்த நாள்: 12 May 2016. 
  4. Sandeep Rawat (14 October 2012). "Mala Raj Lakshmi Shah first woman MP from state". The Tribune (Chandigarh). http://www.tribuneindia.com/2012/20121014/dun.htm#3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலா_பந்த்&oldid=3192658" இலிருந்து மீள்விக்கப்பட்டது