உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தான தீர்மானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தான தீர்மானம், இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதி கட்ட ஈழப்போரின் இறுதி கட்டத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் சிறை பிடிக்கப்பட்டு திறந்தவெளி முகாம்களில் அடைக்கப்பட்டனர். தமிழர்களை நிலை குலையச் செய்த இந்த போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச அளவில் விசாரணை நடத்தி மகிந்த ராசபக்ச உள்ளிட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றமும், சர்வதேச விசாரணை நடத்தி வேண்டும் என்றது. இதற்கு மகிந்த ராசபக்ச தலைமையிலான இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இலங்கை அரசின் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை செய்ய, ஐக்கிய இராச்சியம் ஆதரவுடன் ஐக்கிய அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள 47 உறுப்பு நாடுகள் கொண்ட, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக வாக்கெடுப்பின்றி 1 அக்டோபர் 2015 வியாழக்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்படி மகிந்த ராஜபட்சே அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத் தகுந்த நீதி விசாரணையை இலங்கையில் வைத்து, வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்ளைக் கொண்டு நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளது.[1][2]

தீர்மானம் குறித்த கருத்துகள்

[தொகு]
  • பன்னாட்டு மன்னிப்பு அவை, இந்த தீர்மானம் முழுமையானதல்ல என்றும், இந்த நீதி விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் குடும்பங்களும் தொடர்ந்து கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்றும், போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சாட்சிகளை பாதுகாப்பினை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், இலங்கைக்குள் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிறுவன கட்டமைப்புக்களை வளுப்படுத்த சர்வதேச சமூகமும், இலங்கை அரசும் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.[3]
  • இந்த தீர்மானத்தில் சில முன்னேற்றகரமான அம்சங்கள் காணப்பட்டாலும், இது ஓரளவு வலு குறைந்த்து என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. U.N. body asks Sri Lanka to probe ‘rights abuses
  2. ஐநா தீர்மானம் கோருவது 'கலப்பு விசாரணை பொறிமுறையையே'
  3. SRI LANKA: UN WAR CRIMES RESOLUTION MARKS A TURNING POINT FOR VICTIMS
  4. lanka/2015/10/151001_unhrcsumandiran ஐநா மனித உரிமை ஆணையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: சுமந்திரன்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]