இருவர் (தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இருவர்
Iruvar (TV series).jpg
வகைநாடகத் தொடர்
மர்மப் புனைவு
எழுத்துபிரேமா பொன்ராஜூ
ராஜா தமிழ்மாறன்
நளன் அப்பண்ணா
திரைக்கதைகுமரன் சுந்தரம்
நளன் அப்பண்ணா
வசனம்
ராஜா தமிழ்மாறன்
இயக்கம்குமரன் சுந்தரம்
பாலா சுப்பிரமணியம்
நடிப்புஇந்திரா சந்திரன்
காயத்திரி சேகரன்
விஷ்ணு ஆனந்த்
வர்மன்
ஜபு டீன் ஃபாரூக்
முகப்பு இசைவிக்னேஷ் சரவணன்
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்
எபிசோடுகள்63
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ராஜா தமிழ்மாறன்
தொகுப்புஸ்டீவன்
பிரகாஷ்
ஓட்டம்22-63 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி)
ஒளிபரப்பான காலம்11 திசம்பர் 2016 (2016-12-11) –
29 மார்ச்சு 2017 (2017-03-29)

இருவர் (ஆங்கிலத் தலைப்பு: தி இன்செப்பரபல்ஸ்) என்பது 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சிங்கப்பூர் நாட்டு தமிழ்மொழி நாடக மற்றும் மர்ம தொலைக்காட்சி தொடர் ஆகும். குமரன் சுந்தரம் என்பவர் இயக்கும் இத்தொடரை ராஜா தமிழ்மாறன் என்பவர் தயாரித்திருந்தார். இந்த தொடர் 11 திசம்பர் 2016 ஆம் ஆண்டு முதல் 29 மார்ச்சு 2017 ஆம் ஆண்டு வரை மீடியாக்கார்ப் வசந்தம் அலைவரிசையில் இத்தொடர் ஒளிபரப்பாகி, 63 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1]

கதை[தொகு]

பிரபலமான ஆங்கில எழுத்தாளர் சகானா, புதியதாக தனக்கு தோன்றும் தமிழ்க்கதை ஒன்றை எழுதத் தொடங்குகிறார். அந்தக் கதையில் நடப்பது எல்லாம், தன் வாழ்விலும் நடப்பதைக் கண்டு, கதைக்கும் தனக்குமான தொடர்பு வெறும் காகிதத்தோடு முடிவதில்லை என்பதை உணர்கிறார்.

நடிப்பு[தொகு]

முக்கிய கதாப்பாத்திரங்கள்[தொகு]

  • சகானாவாக இந்திரா சந்திரன்.
  • பைரவியாக காயத்திரி சேகரன்
  • நந்தாவாக விஷ்ணு ஆனந்த்
  • அமரனாக வர்மன் சந்திரமோகன்
  • அகிலனாக ஜபு டீன் ஃபாரூக்

இதர கதாப்பாத்திரங்கள்[தொகு]

  • நரேஷாக பாலகுமரன்
  • நிவேதாவாக திவ்யா ரவீன்
  • பிரதாப்பாக லிங்கம் முத்துசாமி
  • பார்வதியாக ஜமுனா ராணி
  • சோமுவாக குணசீலன்
  • லக்ஷ்மியாக கலையரசி
  • நிர்மலாவாக விமலா வேலு
  • ராதாவாக விக்னேஸ்வரி சே
  • மற்றும் பலர்

ஒளிபரப்பு[தொகு]

11 திசம்பர் 2016 அன்று இத்தொடரின் முதற்பகுதி ஒரு மணிநேர சிறப்புப்பகுதியாக ஒளிபரப்பானது. மற்ற அனைத்து பகுதிகளும் தோராயமாக இருபது நிமிடங்கள் ஓடக்கூடியவை. மிகுந்த வரவேற்பை அடுத்து இத்தொடரின் இறுதிப்பகுதியும் 29 மார்ச்சு 2017 அன்று ஒரு மணிநேர சிறப்புப் பகுதியாக வெளியானது.

இசை[தொகு]

இத்தொடரின் பிண்ணனி இசை விக்னேஷ் சரவணனனால் அமைக்கப்பட்டது. இத்தொடரில் இரு பாடல்கள் இடம்பெற்றன. அவை ஒலித்தடப் பட்டியலாக கீழே வரிசைப் படுத்தப் பட்டுள்ளன.

ஒலித்தடப்பட்டியல்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "நானே இருவர் (முகப்புப் பாடல்)"  கஸ்தூரி 1:23
2. "ராசாத்தி"  அஜீஷ் 3:02

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருவர்_(தொடர்)&oldid=3170201" இருந்து மீள்விக்கப்பட்டது