உள்ளடக்கத்துக்குச் செல்

இருமுனைப் பளுக்கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2 கிலோ எடையுள்ள தட்டுகளுடன் சரிசெய்யக்கூடிய ஒரு ஜோடி இருமுனை பளுக்கருவி

இருமுனை பளுக்கருவி அல்லது டம்பெல்சு (dumbbell) என்பது எடை பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஓர் உபகரணமாகும். இது பொதுவாக தனித்தனியாகவோ அல்லது இணையாகவோ, ஒவ்வொரு கையிலும் ஒன்று என்றவாறு பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு

[தொகு]
பண்டைய கிரேக்கத்தில் தடகள விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் டம்பெல்சு ஏதென்ஸில் உள்ள தேசிய தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது..
பளிங்குக் கற்களில்பண்டைய உரோமையைச் சேர்ந்த பெண் இருமுனைப் பளுக்கருவியுடன் உடற்பயிற்சி செய்வதாகக் காட்டப்பட்டது அண். 286–305 கி.பி

டம்பெல்சின் முன்னோடியான ஹால்டெரெஸ், பண்டைய கிரேக்கத்தில் எடை தூக்குவதற்கும் [1] [2] பண்டைய கிரேக்கத்தில் நடைபெற்ற நீளம் தாண்டுதலின் போது பயன்படுத்தப்படும் எடைகளாகவும் பயன்படுத்தப்பட்டது. [3] குச்சி போன்ற ஒரு வகையான இந்த இருமுனை பளுதூக்கும் கருவியானது ஒரு மில்லினியத்திற்கும் மேலாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது, இது கரலாக்கட்டை என்று அழைக்கப்பட்டது. [4] [5] . இது பொதுவாக, மல்யுத்த வீரர்கள், உடற்பயிற்சியாளார்கள், விளையாட்டு வீரர்கள், வலிமை மற்றும் தசையின் அளவை அதிகரிக்க விரும்பும் நபர்ககளால் உடற்பயிற்சியின்போது பயன்படுத்தப்படுகிறது.

சொற்பிறப்பியல்

[தொகு]

"டம்ப்பெல்" அல்லது "டம்ப் பெல்" அல்லது "டம்ப்-பெல்" என்ற சொல் இசுடூவர்ட் கால இங்கிலாந்தின் பிற்பகுதியில் உருவானது. 1711 ஆம் ஆண்டில் கவிஞர் ஜோசப் அடிசன் தி ஸ்பெக்டேட்டரில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் "இருமுனைப் பளுக்கருவியுடன்" உடற்பயிற்சி செய்வதைக் குறிப்பிட்டார். [6]

வகைகள்

[தொகு]
விருப்பத்திற்கேற்ப எடையினைத் தேர்வு செய்வது
நிலையான எடை கொண்டது

17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஒரு கைப்பிடியில் இரண்டு சம எடைகள் இணைக்கப்பட்ட இருமுனைப் பளுக்கருவியின் பழக்கமான வடிவம் தோன்றியது. [7] தற்போது டம்பெல்லில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன:

  • நிலையான எடை கொண்டது என்பது இருமுனைப் பளுக்கருவி வடிவத்தில் உருவாக்கப்பட்ட எடைக் கருவியாகும் . மலிவான வகைகள் வார்ப்பிரும்பு கொண்டவை, சில சமயங்களில் வசதிக்காக ரப்பர் அல்லது நியோபிரீன் பூசப்பட்டிருக்கும், மேலும் மலிவான பதிப்புகள் கான்கிரீட் நிரப்பப்பட்ட ஒரு திடமான நெகிழிக் கூடுகளைக் கொண்டிருக்கும்.
  • மாற்றியமைக்ககூடியது ஒரு உலோகப் பட்டியைக் கொண்டிருக்கும், அதன் மையப் பகுதி பெரும்பாலும் பிடியை மேம்படுத்துவதற்காக குறுக்குவெட்டு வடிவத்துடன் ( பொளை உளி ) பொறிக்கப்பட்டுள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட (சரிசெய்யக்கூடிய) டம்ப்பெல்சு என்பது சரிசெய்யக்கூடிய டம்பெல்சு ஆகும், அவை டம்பல்ஸ் பிடிதாங்கியில் இருக்கும்போது எடை அல்லது தட்டுகளின் எண்ணிக்கையை எளிதாக மாற்ற அனுமதிக்கும்.

வேறுபாடுகள்

[தொகு]
  • தாமஸ் இன்ச் டம்பெல்சு, "172" என்றும் அழைக்கப்படுகிறது ( 2.38 அங்குலங்கள் (60 mm) கைப்பிடி, 172 pounds (78 kg) ) [8]
  • மில்லினியம் டம்பெல்சு ( 2.38 அங்குலங்கள் (60 mm) கைப்பிடி, 228 pounds (103 kg) )
  • சர்க்கஸ் டம்ப்பெல்சு: வரலாற்று ரீதியாக சர்க்கஸ் செயல்களில் இது பயன்படுத்தப்படுகிறது, இந்த டம்ப்பெல்சு மிகைப்படுத்தப்பட்ட முனைகள், பரந்த கைப்பிடிகள், சாதாரண டம்பல்சுகளைப் போலவே, பல்வேறு எடைகள், அளவுகளில் வருகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gardiner, E. Norman (2002). Athletics in the Ancient World (in ஆங்கிலம்). Courier Corporation. p. 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-42486-6.
  2. Pearl, Bill (2005). Getting Stronger: Weight Training for Sports (in ஆங்கிலம்). Shelter Publications, Inc. p. 388. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-936070-38-4.
  3. Miller, Stephen Gaylord (2004). Ancient Greek Athletics (in ஆங்கிலம்). Yale University Press. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-11529-1. halteres halter.
  4. Heffernan, Conor. "INDIAN CLUB SWINGING IN NINETEENTH AND TWENTIETH-CENTURY INDIA AND ENGLAND" (PDF).
  5. Heffernan, Conor (2016-07-05). Indian club swinging in nineteenth and twentieth-century India and England (Thesis thesis) (in ஆங்கிலம்). Faculty of History, University of Cambridge.
  6. Todd, Ph.D., Jan (1 April 1995). "From Milo to Milo: A History of Barbells, Dumbells, and Indian Clubs" (PDF). LA84 Foundation. Iron Game History: The Journal of Physical Culture. p. 6. Archived from the original (PDF) on 18 November 2017. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  7. Hedrick, Allen (18 Jan 2014). Dumbbell training. Human Kinetics. p. xii.
  8. "INCH 101: Mark Henry's Successful Lift With Inch Dumbbell!". bodybuilding.com. 2008-03-30. பார்க்கப்பட்ட நாள் 2020-04-14.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமுனைப்_பளுக்கருவி&oldid=4170478" இலிருந்து மீள்விக்கப்பட்டது