உள்ளடக்கத்துக்குச் செல்

இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு கொல்லாபுரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தர்மபுரி
அமைவிடம்:இருமத்தூர், அரூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அரூர்
மக்களவைத் தொகுதி:தர்மபுரி
கோயில் தகவல்
மூலவர்:கொல்லாபுரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தமிழ்வருடப்பிறப்பு, 1 நாள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோயில் (kolhapuri mariamman temple) தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி - திருப்பத்தூர் நெடுஞ்சாலையை ஒட்டி இருமத்தூர் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் கொல்லாபுரியம்மன் சன்னதியும், விநாயகர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ்வருடப்பிறப்பு, 1 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது.

நம்பிக்கைகள்

[தொகு]

திருட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக இக்கோயிலில் புதுமையான வழிபாடு நடத்தப்படுகிறது. கோவிலுக்கு அருகில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. திருட்டு போன பொருட்கள் கிடைக்க வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் இந்த புளியமரத்தின் கிளையில் உயிருடன் உள்ள கோழிகளின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தொங்க விட்டு விடுகிறார்கள். இவ்வாறு கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.[3]

படவரிசை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

விக்கிமேப்பியாவில் கோயில் அமைவிடம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "இருமத்தூரில் பிரசித்தி பெற்ற கொல்லாபுரிஅம்மன் கோவில்". எட்டுரை. மாலை மலர். 30 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2018. {{cite web}}: Check date values in: |date= (help)