இருபுரோப்பைல்வெள்ளீயம் இருகுளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைபுரோப்பைல்டின் டைகுளோரைடு, இருபுரோப்பைல்வெள்ளீயம் இருகுளோரைடு,
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
இருகுளோரோ(இருபுரோப்பைல்)சிடானேன்[1] | |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
867-36-7 | |
ChemSpider | 84462 |
EC number | 696-456-9 [1] |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 93562 |
வே.ந.வி.ப எண் | WH7255000[2] |
| |
UNII | 714O4P8M1O [1] |
UN number | UN3146[2] |
பண்புகள் | |
(CH3CH2CH2)2SnCl2 | |
வாய்ப்பாட்டு எடை | 275.79 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம்[2] |
உருகுநிலை | 82–84 °C (180–183 °F; 355–357 K)[2] |
கரைதிறன் |
|
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
Sn அணுவில் நான்முகி வடிவம் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நஞ்சு |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இருபுரோப்பைல்வெள்ளீயம் இருகுளோரைடு (Dipropyltin dichloride) என்பது (CH3CH2CH2)2SnCl2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம வெள்ளீயச் சேர்மமான இது வெண்மை நிறத்தில் திண்மப்பொருளாகக் காணப்படுகிறது. கரிமவெள்ளீயச் சேர்மங்கள் வகையில் துணைப்பிரிவான இருகரிமவெள்ளீயம் ஈராலைடு (R2Sn2) என்ற பிரிவில் இருபுரோப்பைல்வெள்ளீயம் இருகுளோரைடு வகைப்படுத்தப்படுகிறது. வாய்பாட்டிலுள்ள R கரிமக் குழுவையும் X ஆலைடு குழுவையும் குறிக்கிறது.[3]
பயன்
[தொகு]இருபுரோப்பைல்வெள்ளீயம் இருகுளோரைடு தொழில்துறையிலும் ஆய்வகங்களிலும் பரந்த பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. பாலிவினைல் குளோரைடு நிலைப்படுத்தியாகவும், பூஞ்சைக் கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லியாகவும் இதைப் பயன்படுத்தலாம்.[3]
தீமைகள்
[தொகு]இருபுரோப்பைல்வெள்ளீயம் இருகுளோரைடு தோலின் வழியாக உறிஞ்சப்பட்டு, குடிமயக்கத்தை உண்டாக்கும். தோல், கண்கள் மற்றும் சுவாச அமைப்புகளை எரிச்சலூட்டும். விழுங்கினால் இது நச்சுத்தன்மை வாய்ந்தது. இந்த இரசாயனம் இனப்பெருக்க அமைப்புக்கு நச்சுத்தன்மையை உருவாக்கி மனிதப் பிறழ்வு, விந்தைப்பிறப்புக்கு காரணமாகலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இருபுரோப்பைல்வெள்ளீயம் இருகுளோரைடு வலுவான ஆக்சிசனேற்ற முகவர்களுடன் தீவிரமாக வினைபுரிகிறது. தீப்பிடித்தவுடன், கார்பன் மோனாக்சைடு (CO), கார்பன் டை ஆக்சைடு (CO2), வெள்ளீயம்(II) ஆக்சைடு (SnO), வெள்ளீயம்(IV) ஆக்சைடு (SnO2) மற்றும் ஐதரசன் குளோரைடு (HCl) போன்ற எரிச்சலூட்டும் நச்சுப் புகைகள், வாயுக்கள் வெளியிடப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Dichlorodipropylstannane". pubchem.ncbi.nlm.nih.gov.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 https://www.trc-canada.com/prod-img/MSDS/D434270MSDS.pdf
- ↑ 3.0 3.1 "867-36-7 | Dichlorodipropyltin | Dipropyltin Dichloride ; dichlorodipropyltin; Di-n-Propyltin Dichloride; Dichlorodipropylstannane; Dichlorodipropyltin; Dipropyltin Chloride; NSC 92618 | C₆H₁₄Cl₂Sn | TRC".