இருஅடிக்கண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருஅடிக்கண்டங்களின் கணம்
அறுகோண இருஅடிக்கோணம் bifrustum
அறுகோண இருஅடிக்கோண எடுத்துக்காட்டு
முகங்கள் 2 n-கோணிகள், 2n சரிவகங்கள்
விளிம்புகள் 5n
உச்சிகள் 3n
சமச்சீர்மை குலம் Dnh, [n,2], (*n22)
இருமப் பன்முகி நீள் இருபட்டைக்கூம்புகள்
பண்புகள் குவிவு

ஒரு n-கோண இருஅடிக்கண்டம் (bifrustum) என்பது மூன்று இணையான n-கோணத் தளங்களைக் கொண்ட பன்முகியாகும். இம்மூன்று தளங்களில், நடுத்தளம் மூன்றிலும் பெரிதானதாகவும் மேல், அடித் தளங்கள் முற்றொத்தவையாகவும் இருக்கும். இரு முற்றொத்த அடிக்கண்டங்களை சமச்சீர் தளங்களில் இணைப்பது மூலமாக இரு அடிக்கண்டத்தை வடிவமைக்கலாம். இரு துருவ முனைகளை முனைத்துண்டித்தல் மூலமாகவும் இருஅடிக்கண்டத்தை ஒரு இருபட்டைக்கூம்பாகப் பெறலாம்.

இருஅடிக்கண்டங்கள், நீள் இருபட்டைக்கூம்பு குடும்பத்தின் இருமமாக இருக்கும்.

அமைப்புகள்[தொகு]

மூன்று இருஅடிக்கணடங்கள், ஜான்சன் திண்மங்கள் J14-16 மூன்றுக்கு இருமங்களாக இருக்கும். பொதுவாக ஒரு n-கோண இருஅடிக்கண்டம், 2n சரிவகங்கள், 2 n-கோணிகளைக் கொண்டிருக்கும். நீள் இருஅடிக்கண்டங்களின் இருமமாகவும் இருக்கும்.

முக்கோண இருஅடிக்கண்டம் சதுர இருஅடிக்கண்டம் ஐங்கோண இருஅடிக்கண்டம்
Dual elongated triangular dipyramid.png Dual elongated square dipyramid.png Dual elongated pentagonal dipyramid.png
6 சரிவகங்கள், 2 முக்கோணங்கள். நீள் முக்கோண இருஅடிக்கண்டத்தின் (ஜான்சன் திண்மம்-J14) இருமம். 8 சரிவகங்கள், 2 சதுரங்கள். நீள் சதுர இருஅடிக்கண்டத்தின் (ஜான்சன் திண்மம்-J15) இருமம் 10 சரிவகங்கள், 2 ஐங்கோணங்கள். நீள் ஐங்கோண இருஅடிக்கண்டத்தின் (ஜான்சன் திண்மம்-J16) இருமம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருஅடிக்கண்டம்&oldid=3384915" இருந்து மீள்விக்கப்பட்டது