முக்கோண இருஅடிக்கண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்கோண இருஅடிக்கண்டம்
வகை இருஅடிக்கண்டம்
முகங்கள் 6 சரிவகம்,
2 முக்கோணம்
விளிம்புகள் 15
உச்சிகள் 9
சமச்சீர்மை குலம் D3h
இருமப் பன்முகி நீள் முக்கோண இருபட்டைக்கூம்பு
பண்புகள் குவிவு
வலையமைப்பு

முக்கோண இருஅடிக்கண்டம் (triangular bifrustum) என்பது, இருஅடிக்கண்டப் பன்முகிகளின் முடிவிலாத் தொடரில் முதலாவதாக உள்ள இருஅடிக்கண்ட வகையாகும். ஒரு முக்கோண இருஅடிக்கண்டம் 6 சரிவக முகங்களையும் 2 முக்கோண முகங்களையும் கொண்டது. முக்கோண இருஅடிக்கண்டத்தைத் முனைதுண்டிக்கப்பட்ட முக்கோண இருபட்டைக்கூம்பு எனவும் அழைக்கலாம். எனினும் ஒரு முக்கோண இருபட்டைக்கூம்பின் ஐந்து முனைகளையும் துண்டிக்கக் கிடைக்கும் பன்முகியும் இதே பெயரால் அழைக்கப்படுவதால், முனைதுண்டிக்கப்பட்ட முக்கோண இருபட்டைக்கூம்பு என முக்கோண இருஅடிக்கண்டத்தை அழைப்பது ஈரடிவகைக்குள்ளாகும்.[1]

ஒரு முக்கோண இருபட்டைக்கூம்பின் துருவ அச்சின் இரு முனைகளையும் துண்டித்து அதனை இரு அடிக்கு-அடி அடிக்கண்டங்களின் இணைப்பு மூலம் ஒரு முக்கோண இருஅடிக்கண்டத்தை வடிவமைக்கலாம். இது ஒரு மீநுண்மபடிக வடிவில் இருக்கும்.[2][3]

அடுக்கப்பட்ட இரு ஒழுங்கு எண்முகிகளின் பக்கங்களைச் சுற்றி மூன்று சோடி நான்முகிகளை இணைத்து ஒரு முனைதுண்டிக்கப்பட்ட முக்கோண இருபட்டைக்கூம்பை வடிவமைக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. For instance, Haji-Akbari et al. use it in the latter sense: see Haji-Akbari, Amir; Chen, Elizabeth R.; Engel, Michael; Glotzer, Sharon C. (2013), "Packing and self-assembly of truncated triangular bipyramids", Phys. Rev. E, 88 (1): 012127, arXiv:1304.3147, Bibcode:2013PhRvE..88a2127H, doi:10.1103/physreve.88.012127, PMID 23944434 {{citation}}: Cite has empty unknown parameter: |1= (help).
  2. Kharisov, Boris I.; Kharissova, Oxana Vasilievna; Ortiz-Mendez, Ubaldo (2012), Handbook of Less-Common Nanostructures, CRC Press, p. 466, ISBN 9781439853436.
  3. Yoo, Hyojong; Millstone, Jill E.; Li, Shuzhou; Jang, Jae-Won; Wei, Wei; Wu, Jinsong; Schatz, George C.; Mirkin, Chad A. (2009), "Core–Shell Triangular Bifrustums", Nano Letters, 9 (8): 3038–3041, Bibcode:2009NanoL...9.3038Y, doi:10.1021/nl901513g, PMC 3930336, PMID 19603815.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கோண_இருஅடிக்கண்டம்&oldid=3386451" இலிருந்து மீள்விக்கப்பட்டது