இரீதி சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துணை-லெப்டினென்ட்
இரீதி சிங்
பிறப்பு1996
உத்தரப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
பணிஹெலிகாப்டர் கடற்படையில் கண்காணிப்பாளர் (வான்வழி தந்திரோபாயம்)
செயற்பாட்டுக்
காலம்
2020 -
பணியகம்இந்தியக் கடற்படை
அறியப்படுவதுஇந்தியக் கடற்படை போர்க்கப்பல்களில் இருந்து இயங்குவதற்காக நியமிக்கப்பட்ட முதல் இரண்டு பெண்களில் ஒருவர்

துணை லெப்டினென்ட் இரீதி சிங் (Riti Singh) இந்தியக் கடற்படை போர்க்கப்பல்களில் இருந்து இயங்குவதற்காக நியமிக்கப்பட்ட முதல் இரண்டு பெண்களில் இரீதி சிங்கும் ஒருவர், மற்றொருவர் குமுதினி தியாகி ஆவார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

நான்கு தலைமுறைகளாக ஆயுதப்படைகளில் பணியாற்றிய வரலாற்றைக் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து இவர் வருகிறார். இவரது தாத்தா இந்தியத் தரைப்படையில் சமிக்ஞைகள் அதிகாரியாக பணியாற்றினார். இவரது தந்தை கமாண்டர் எஸ்.கே.சிங் இந்தியக் கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றார். [2] இவரது தாயார் ஒரு ஆங்கில ஆசிரியர், இவருக்கு இரியா என்ற மூத்த சகோதரி உள்ளார். [3]

இவர் 1996 இல் உத்தரபிரதேசத்தில் பிறந்தார். இவரது குடும்பம் வசித்து இங்கு வருகிறது. இவர்கள் 2002 ல் தெலங்காணாவின் ஐதராபாத்துக்குச்சென்றனர். இவர், கணினி அறிவியலில் இளங்கலை தொழில்நுட்பம் பெற்றவர். [3]

தொழில்[தொகு]

கொச்சியின் தெற்கு கடற்படை கட்டளையிலிருந்து 22 வது அதிகாரிகள் பயிற்சி கழக கண்கானிப்பாளர் பாடத்திட்டத்தை [4] முடித்தார். [5] சோர்டிஸ் மற்றும் சிமுலேட்டர் விமானங்கள் உட்பட 60 மணிநேர பறக்கும் பயிற்சி இதில் அடங்கும். [6]

செப்டம்பர் 21, 2020 அன்று, இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் கடற்படையில் ஒரு கண்காணிப்பாளராக (வான்வழி தந்திரோபாயம்) சேர்க்கப்பட்டார். கொச்சியின் ஐ.என்.எஸ் கருடாவில் நடைபெற்ற ஒரு விழாவில், "கண்காணிப்பாளகள்" என்று பட்டம் பெற்றதற்காக "சிறகுகள்" வழங்கப்பட்ட நான்கு பெண்கள் அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல்படையின் மூன்று அதிகாரிகள் உட்பட 17 அதிகாரிகள் குழுவில் அவர் ஒருவராக இருந்தார். விழாவுக்கு தலைமை தாங்கிய தலைமை பணியாளர் அதிகாரி (பயிற்சி) அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ், இது ஒரு முக்கிய சந்தர்ப்பமாக எடுத்துரைத்தார். [7] இவரது பணிகள் நீண்ட கால பயணங்கள் உட்பட முன்னணி இந்திய கடற்படை போர்க்கப்பல்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [8]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "In a first, 2 women officers to operate helicopters from Indian Navy warships". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
  2. "Meet the lady officers making naval history". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.
  3. 3.0 3.1 "Been waiting for this moment all my life: Sub Lieutenant Riti Singh's dreams take 'wing'". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.
  4. "Observer - Join Indian Navy | Government of India". www.joinindiannavy.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
  5. "2 महिला अफसरों को पहली बार वॉरशिप पर तैनात करेगी नौसेना, ये हेलिकॉप्टरों को ऑपरेट करेंगी; राफेल को भी पहली महिला पायलट जल्द मिलेगी". Dainik Bhaskar (in இந்தி). 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
  6. "Designating enemies, pointing out targets will be my job: Navy woman officer picked for deployment on warship". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
  7. "Women Officers in Helicopter Stream of Indian Navy". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
  8. "2 women officers to operate choppers from warships". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரீதி_சிங்&oldid=3095120" இலிருந்து மீள்விக்கப்பட்டது