உள்ளடக்கத்துக்குச் செல்

பாவனா காந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவனா காந்த்
பாவனா காந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 திசம்பர் 1992 (1992-12-01) (அகவை 31)
தர்பங்கா,[1]பீகார், இந்தியா
துணைவர்கன்கையா ஆச்சார்யா
வேலைபோர் விமானி
விருதுகள்நாரி சக்தி புரஸ்கார்
Military service
பற்றிணைப்பு இந்தியா
கிளை/சேவை இந்திய வான்படை
தரம் விமான லெப்டினன்ட்
(இடமிருந்து வலம்) மோகனா சிங், அவானி சதுர்வேதி மற்றும் பவானா காந்த்

பவானா காந்த் (Bhawana Kanth) இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகளில் ஒருவராவார். [2] மோகனா சிங் மற்றும் அவானி சதுர்வேதி ஆகிய இருவருடன் இவர் முதல் போர் விமானியாக அறிவிக்கப்பட்டார். இந்த மூவரும் சூன் 2016 இல் இந்திய வான்படையின் போர் படைக்குள் சேர்க்கப்பட்டனர். அப்போதைய பாதுகாபமைச்சர் மனோகர் பாரிக்கர் அவர்களால் 2016 ஆம் ஆண்டு சூன் 18 ஆம் தேதி தேசத்திற்கு சேவை செய்ய முறையாக நியமிக்கப்பட்டார் [3]சோதனை அடிப்படையில் இந்திய விமானப்படையில் போர் விமானத்தை ஆரம்பிக்க இந்திய அரசு முடிவு செய்த பின்னர், இந்த மூன்று பெண்களும் இந்த திட்டத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர், மே 2019 இல், இந்தியாவில் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள தகுதி பெற்ற முதல் பெண் போர் விமானி ஆனார். [4]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவர், 1992 திசம்பர் 1 அன்று பீகாரின் தர்பங்காவில் [1] பிறந்தார். இவரது தந்தை தேஜ் நாராயண் காந்த் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் மின் பொறியாளர், இவரது தாய் இராதா காந்த் ஒரு இல்லத்தரசியாவார். வளர்ந்து வரும் போது, கோ-கோ, இறகுப்பந்தாட்டம், நீச்சல் மற்றும் ஓவியம் போன்ற விளையாட்டுகளை இவர் விரும்பினார்.

கல்வி

[தொகு]

காந்த், பரௌனி சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள டி.ஏ.வி பொதுப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். [2] இவர் ராஜஸ்தானின் கோட்டாவில் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாரானார். காந்த் மேலதிக படிப்புகளுக்காக பெங்களூரு பி.எம்.எஸ் பொறியியல் கல்லூரியில் உயிர்மருத்துவப் பொறியியல் துறையில் இளங்கலைப் பொறியியல், [5] 2014 இல் பட்டம் பெற்றார். பின்னர், தகவல் தொழிழ்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [6]

தொழில்

[தொகு]
2020 ல் சர்வதேச மகளிர் தினத்தன்று நாரி சக்தி விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி.

இவர், எப்போதுமே பறக்கும் விமானங்களைப் பற்றி கனவு கண்டு வந்துள்ளார். இவர் விமானப்படை பொது சேர்க்கை தேர்வை எடுத்தார். மேலும், விமானப்படையில் நியமிக்க தேர்வு செய்யப்பட்டார். [7] தனது நிலை 1 பயிற்சியின் ஒரு பகுதியாக, இவர் போர் நீரோட்டத்தில் சேர்ந்தார்.

சூன் 2016 இல், ஐதராபாத்தில் உள்ள ஹக்கீம்பேட்டை விமானப்படை நிலையத்தில் கிரண் இடைநிலை ஜெட் பயிற்சியாளர்களுக்கான ஆறு மாத கால நிலை II பயிற்சி பெற்றார். அதன்பிறகு அதே ஆண்டு இவர் துண்டிக்கலில் உள்ள விமானப்படை அகாதமியில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அணிவகுப்பு வசந்த கால பறக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். [5] [8]

ஹாக் மேம்பட்ட ஜெட் பயிற்சிக்காகப் பறக்கவிட்டு, இவரையும் இவரது கூட்டாளிகளான மற்ற இரண்டு உறுப்பினர்களையும் எம்.ஐ.ஜி 21 பைசன் படைக்கு நகர்த்துவதற்கான திட்டமிடப்பட்டது. 16 மார்ச் 2018 அன்று பறக்கும் அதிகாரி பவானா காந்த் மிக் -21 'பைசன்' என்ற தனி விமானத்தை எடுத்துக்கொண்டார். இவர் அம்பலா விமானப்படை நிலையத்திலிருந்து மிக் -21 இன் தனி விமானத்தை சுமார் 1400 மணி நேரத்தை பறக்க விட்டுள்ளார்.

இவர், சில விளம்பரப் பணிகளை முயற்சித்தார். மேலும், அச்சு விளம்பரங்களில் தோன்றினார். [6]

மார்ச் 9, 2020 அன்று, இவருக்கு நாரி சக்தி விருது கௌரவத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார் [9]

இவர் இந்திய வான்படையின் எண் 3 போர்ப்படையான கோப்ராவுக்கு பணியமர்த்தப்பட்டார். [10]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Flt Lt Bhawana Kanth is the first woman fighter pilot to qualify for combat duty". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-05-23. பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
  2. 2.0 2.1 "Latest Current Affairs and News About Bhawana Kanth - Current Affairs Today". currentaffairs.gktoday.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
  3. Gurung, Shaurya Karanbir (2019-07-17). "IAF pilots test F-21 simulator". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/defence/iaf-pilots-with-indias-first-female-fighter-pilot-test-f-21-simulator/articleshow/70254376.cms?from=mdr. 
  4. Gurung, Shaurya Karanbir (2019-05-22). "Bhawana Kanth becomes 1st fighter pilot to qualify to undertake combat missions". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/defence/bhawana-kanth-becomes-1st-fighter-pilot-to-qualify-to-undertake-combat-missions/articleshow/69448041.cms?from=mdr. 
  5. 5.0 5.1 "Landmark event in IAF history: Meet India's first 3 women fighter pilots" (in en-US). http://www.firstpost.com/india/landmark-event-in-iaf-history-meet-indias-first-3-women-fighter-pilots-2841698.html. 
  6. 6.0 6.1 . 
  7. "Meet country's first women fighter pilots- The Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
  8. . 
  9. "Flying MiG-21 Bison matter of pride: Flt Lt Bhawana Kanth". Livemint (in ஆங்கிலம்). 2020-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  10. "Bhawana Kanth Is India's First Woman Pilot to Qualify for Combat Missions". NDTV. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவனா_காந்த்&oldid=3400284" இலிருந்து மீள்விக்கப்பட்டது