குஞ்சன் சக்சேனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குஞ்சன் சக்சேனா
சுதேசியப் பெயர்
குஞ்சன்
பிறப்பு1975 (அகவை 48–49)[1]
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்திய வான்படை
சேவைக்காலம்1996–2004
தரம் Flight Lieutenant
போர்கள்/யுத்தங்கள்கார்கில் போர்

குஞ்சன் சக்சேனா (பிறப்பு 1975) [1] இந்திய விமானப்படை (IAF) அதிகாரியம் முன்னாள் உலங்கு வானூர்தி விமானியுமாவார். 1996 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் சேர்ந்த இவர்,1999 ஆம் ஆண்டில் நடைபெற்றகார்கில் போரில் கலந்துகொண்ட விமானப்படை வீரருமாவார். [2] [3] [4] போர் நடைபெறும் போது,  கார்கில் போரினால் காயமடைந்தவர்களை வெளியேற்றுவது, போர் சம்பந்தப்பட்ட போக்குவரத்து பொருட்கள் மற்றும் கண்காணிப்புக்கு உதவுவது போன்ற காரணங்களுக்காக உலங்கு வானூர்தியில் பறந்த முதல் பெண்களில் இவரும் ஒருவராவார். மேலும் கார்கில் போரினால் காயமடைந்த மற்றும் இறந்த 900 க்கும் மேற்பட்ட துருப்புக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக போர் முனைக்கு சென்றுள்ளார்.  2004 ஆம் ஆண்டில், எட்டு ஆண்டுகள் விமானியாகப் பணியாற்றிய பிறகு, உலங்கு வானூர்தி விமானியாக அவரது தொழில் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. [5]

2020 ஆம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படமான குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.

கிரண் நிர்வான் என்ற எழுத்தாளருடன் இணைந்து குஞ்சன், அவரது சுயசரிதையான  கார்கில் பெண் என்பதை எழுதியுள்ளார். இப்புத்தகம் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

குஞ்சன், பாரம்பரியமாக இராணுவ குடும்பத்தில் புரிந்தவர். [6] லெப்டினன்ட் கர்னல் அனுப் குமார் சக்சேனா இவரது தந்தையாவார்.லெப்டினன்ட் கர்னல். அன்சுமான் இவரது சகோதரராவார். இருவருமே இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள். குஞ்சன், புதுதில்லியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவராவார்.

இந்திய விமானப்படை சேவை[தொகு]

1996 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் (IAF) விமானியாக சேர்ந்த ஆறு பெண்களில் குஞ்சனும் ஒருவர். இவர்களின் குழு, இந்திய விமானப்படைக்கான நான்காவது பெண் விமானப் படைப் பயிற்சி குழுவாகும். . சக்சேனாவின் முதல் பதவியானது உதம்பூரில் இயங்கிவரும் 132 முன்னோக்கு பகுதி கட்டுப்பாட்டின் (எஃப்ஏசி) ஒரு பகுதியான விமான லெப்டினன்டாக பொறுப்பேற்றதே குஞ்சனின் முதல் விமானப்படை வேலையாகும்.

கார்கில் போரின்போது ஸ்ரீநகரை மையமாகக் கொண்டு விமானங்களில் பறந்து போர்முனைக்கு சென்ற போது, குஞ்சனுக்கு இருபத்திநான்கு வயது மட்டுமே. மேலும் கார்கில் போரில், ஆபரேஷன் விஜய்யின் ஒரு பகுதியாக, காயமடைந்தவர்களை வெளியேற்றுவதைத் தவிர , திராஸ் மற்றும் பட்டாலிக் ஆகிய லடாக்கின் முன்னோக்கிப் பகுதிகளில் உள்ள போர்த்துருப்புக்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும் எதிரி நிலைகளை வரைபடமாக்குவது போன்ற கண்காணிப்புப் பணிகளையும் செய்துள்ளார். தற்காலிக தரையிறங்கும் மைதானங்கள், 13,000 முதல் 18,000 அடி உயரம் மற்றும் எதிரிகளின் தாக்குதல்கள் போன்றவைகளை சமாளித்துள்ள குஞ்சன், ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட பத்து விமானிகளில் ஒருவராவார், மேலும் போரின் போது நூற்றுக்கணக்கான விமானங்களை ஓட்டி, 900 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள், காயமடைந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களை சமதளப் பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளார், குஞ்சன் மட்டுமே இந்திய ஆயுதப்படைகளில் கார்கில் போர் மண்டலங்களுக்கு பறந்த ஒரே பெண் விமானியாவார். 2004 ஆம் ஆண்டில், ஹெலிகாப்டர் ஓட்டியாக பணிபுரிந்த அவரது வாழ்க்கை எட்டு ஆண்டுகளுக்கு பின்பாக முடிவுக்கு வந்தது.


தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சக்சேனாவின் தந்தை அனுப் சக்சேனா இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக இருந்தார். விங் கமாண்டராக இந்திய விமானப்படையில் பணியாற்றி வரும்விமானி, கவுதம் நரேன் குஞ்சனின் கணவராவார். இவர் இந்திய விமானப்படையின் Mi-17 ஹெலிகாப்டரின் ஓட்டுனர் ஆவார். மேலும் தேசிய பாதுகாப்பு கல்விநிலையத்தில் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார், இந்த கல்விநிலையம், உலகின் முதல் முப்படை அகாடமி ஆகும். இத்தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Watched 'Gunjan Saxena: The Kargil Girl'? Here's the story of the woman it is based on". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-08-20.
  2. Bhadani, Priyanka (26 July 2020). "Gunjan Saxena never thought in her wildest dreams she would inspire a film". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
  3. Menon, Smitha (16 June 2020). "The story of Gunjan Saxena, one of India's first women in combat". Condé Nast Traveller India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
  4. Javaid, Arfa (10 June 2020). "Gunjan Saxena Biography: Early Life, Education, Career, Awards and Unknown Facts". Jagranjosh.com. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
  5. Rawat, Rachna Bisht (17 July 2019). "Meet Flying Officer Gunjan Saxena, India's only woman warrior in the Kargil war". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 August 2020. She has attained the glory of being in the two woman involved in the Kargil War.
  6. Talwar, Shikha (9 June 2020). "This is the real story of Saxena, the Kargil girl who has inspired Janhvi Kapoor's next film". GQ India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்சன்_சக்சேனா&oldid=3704768" இலிருந்து மீள்விக்கப்பட்டது