உள்ளடக்கத்துக்குச் செல்

குமுதினி தியாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துணை-லெப்டினென்ட்
குமுதினி தியாகி
பிறப்பு1997
காசியாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விகனிணி அறிவியலில் பொறியியல்
படித்த கல்வி நிறுவனங்கள்காசியாபாத், ஏபிஇஎஸ் பொறியியல் கல்லூரி
பணிஹெலிகாப்டர் கடற்படையில் கண்காணிப்பாளர் (வான்வழி தந்திரோபாயம்)
அமைப்பு(கள்)இந்தியக் கடற்படை
அறியப்படுவதுஇந்தியக் கடற்படை போர்க்கப்பல்களில் இருந்து இயங்குவதற்காக நியமிக்கப்பட்ட முதல் இரண்டு பெண்களில் ஒருவர்

துணை லெப்டினென்ட் குமுதினி தியாகி (Kumudini Tyagi) இந்தியக் கடற்படை போர்க்கப்பல்களில் இருந்து இயங்குவதற்காக நியமிக்கப்பட்ட முதல் இரண்டு பெண்களில் குமுதினி தியாகியும் ஒருவர், மற்றொருவர் இரீதி சிங் ஆவார். [1] [2] [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

குமுதினி தியாகி காசியாபாத்தில், 1997 இல் பிரவேசு குமார் தியாகி மற்றும் இரீனா தியாகி ஆகியோருக்கு பிறந்தார். [4] இந்த குடும்பம் மீரட்டின் கார்கோடாவைச் சேர்ந்தது. ஆனால் 1983இல் காசியாபாத்திற்கு குடிபெயர்ந்தது. இவரது தாத்தா, சுரேஷ் சந்த் தியாகி உத்தரப் பிரதேசக் காவல்துறையில் துணை ஆய்வாளராக இருந்தார். இவரது தந்தை ஒரு பாதுகாப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். குமுதினியின் பாட்டியின் பெயர் இராஜேஷ் குமாரி தியாகி என்பதாகும். இவருக்கு அபூர்வா தியாகி என்ற ஒரு தம்பி இருக்கிறார். அபூர்வா ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளின் எழுத்துத் தேர்வையும் முடித்துள்ளார். [3] இந்த குடும்பம் காசியாபாத்தின் சஞ்சய் நகர் பிரிவு -23 இல் வசிக்கிறது [5]

கல்வி[தொகு]

குமுதினி தனது இடைநிலைக் கல்வியை ராஜ்நகர் [6] புனித பால் கல்விக் கழகத்திலிருந்தும்], [7] சி.எஸ்.சாபில் தாஸ் பொதுப் பள்ளியிலிருந்து] தனது மேல்நிலைக் கல்வியையும் பெற்றார். பின்னர், ஏபிஇஎஸ் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் இளங்கலை தொழில்நுட்பத்தைப் பெற்றார். இவர் பாதுகாப்புப் படைகளில் சேருவதில் ஆர்வமாக இருந்தார். மேலும் கிரண் செகாவத்திற்கு 2015இல் ஏற்பட்ட துயர சம்பவம் இவரை ஆழமாக பாதித்தது. [8] இவர் மிகவும் இலாபகரமான ஒரு மாற்று வேலை வாய்ப்பைக் கொண்டிருந்தாலும், 2018 திசம்பரில் கடற்படையில் நியமிக்கப்பட்டார். இவரது குடும்பத்தினர் இவரை ஒரு புத்திசாலித்தனமான, ஆனால் பொருத்தமான பெண் என்று வர்ணிக்கிறார்கள். [3]

தொழில்[தொகு]

குமுதினி கொச்சியின் தெற்கு கடற்படை கட்டளையிலிருந்து 22 வது அதிகாரிகள் பயிற்சி கழகத்தின் பாடத்திட்டத்தை முடித்தார். [9] [10] சோர்டிஸ் மற்றும் சிமுலேட்டர் விமானங்கள் உட்பட 60 மணிநேர பறக்கும் பயிற்சியும் இதில் அடங்கும். [11] பயிற்சியின்போது, 2019 இன்டர் ஸ்க்ராட்ரான் நோவீஸ் எக்ஸ்-கன்ட்ரி போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தார், 8 கி.மீ ஓட்டத்தில் 46 நிமிடம் 29 வினாடிகளில் பிடித்தார். [12]

செப்டம்பர் 21, 2020 அன்று, குமுதினி இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் கடற்படையில் ஒரு பார்வையாளராக (வான்வழி தந்திரோபாயர்) சேர்க்கப்பட்டார். கொச்சியின் ஐ.என்.எஸ் கருடாவில் நடைபெற்ற ஒரு விழாவில், "கண்காணிப்பாளர்கள்" என்று பட்டம் பெற்றதற்காக "சிறகுகள்" வழங்கப்பட்ட நான்கு பெண்கள் அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல்படையின் மூன்று அதிகாரிகள் உட்பட 17 அதிகாரிகள் குழுவில் இவர் ஒருவராக இருந்தார். [5]. கோவிட்-19 நிலைமை காரணமாக இவரது குடும்பத்தினர் வரலாற்று நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. [3]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "In a first, 2 women officers to operate helicopters from Indian Navy warships". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
 2. Service, Tribune News. "Navy selects 2 women officers for warship". Tribuneindia News Service.
 3. 3.0 3.1 3.2 3.3 "Sub Lieutenant Kumudini Tyagi: The engineer who chose the ocean over office". hindustantimes.com.
 4. "गाजियाबाद की कुमुदिनी त्यागी ने रचा इतिहास, पहली बार किसी महिला की युद्धपोत पर हुई तैनाती". https://www.jagran.com/uttar-pradesh/ghaziabad-ncr-know-about-sub-lieutenant-kumudini-tyagi-who-join-as-observers-in-helicopter-stream-at-indian-navy-jagran-special-20778516.html. 
 5. 5.0 5.1 "नौसेना अफसर के पिता बोलेः बेटी पर नाज, मेरे लिए जिंदगी का सबसे खुशी का दिन". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
 6. http://www.stpaulsacademy.in/
 7. http://ccdps.in/
 8. "Meet the lady officers making naval history". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
 9. "Observer - Join Indian Navy | Government of India". www.joinindiannavy.gov.in.
 10. "2 महिला अफसरों को पहली बार वॉरशिप पर तैनात करेगी नौसेना, ये हेलिकॉप्टरों को ऑपरेट करेंगी; राफेल को भी पहली महिला पायलट जल्द मिलेगी". Dainik Bhaskar (in இந்தி). 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
 11. "Designating enemies, pointing out targets will be my job: Navy woman officer picked for deployment on warship". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
 12. "In a historic first, two women chopper pilots to operate from Navy warship". The New Indian Express.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுதினி_தியாகி&oldid=3094934" இலிருந்து மீள்விக்கப்பட்டது