உள்ளடக்கத்துக்குச் செல்

இராய்ப்பூர் மத்திய சிறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராய்ப்பூர் மத்திய சிறை (Raipur Central Jail) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் அமைந்துள்ள 5 மத்திய சிறைகளில் இதுவும் ஒன்றாகும். [1] [2] இந்த சிறையின் மொத்த கொள்ளளவு 1100 பேர். ஆனால் எந்த நேரத்திலும், சிறைச்சாலையின் கொள்ளளவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான கைதிகள் இங்கு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரசு தொற்றுநோய் தாக்கியபோது இந்த சிறையில் பல கைதிகள் சாமீன் பெற்றனர். [3] இராய்ப்பூர் மத்திய சிறையானது ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. பல சுதந்திர போராட்ட வீரர்கள் இங்கு கைதிகளாக இருந்துள்ளனர். [4] 2016 ஆம் ஆண்டு, காந்தி செயந்தி அன்று (02-அக்டோபர்), குறைந்தபட்ச ஊதியம், வங்கிக் கணக்குகள் மற்றும் மேம்பட்ட வாழ்க்கை வசதிகள் ஆகியவற்றைக் கோரி, கைதிகள் சத்தியாகிரகம் எனற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். [5] 2019 ஆம் ஆண்டில், இராய்ப்பூர் மத்திய சிறையின் மருத்துவ அதிகாரிகளில் ஒருவர் பணக்கார கைதிகளுக்கு முன்னுரிமை அளித்து ஏழைகளை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். [6]

குறிப்பிடத்தக்க கைதிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chhattisgarh Jail - Ministry,Headquarters,Rehabilitation policy,Remission,Activity,Budget,Contacts". jail.cg.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
  2. "इस जेल में कैदियों के आए 'अच्छे दिन', 15 किलो तक बढ़ा वजन". Aaj Tak (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
  3. "रायपुर सेंट्रल जेल में कोरोना ब्लास्ट, एक साथ सामने आए 41 पॉजिटिव मामले". Zee Madhya Pradesh Chhattisgarh. 2020-08-07. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
  4. "कोरोना इफेक्ट: वायरस फैलने के डर से रायुपर के सेंट्रल जेल से कैदियों को दी जा रही जमानत, अब तक 90 बंदियों को छोड़ा गया". Dainik Bhaskar (in இந்தி). 2020-03-28. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
  5. "Raipur: Inmates begin 'Jail Satyagrah' on Oct 2, share demands on social media". Hindustan Times (in ஆங்கிலம்). 2016-10-04. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
  6. "Raipur Central Jail Medical Officer accused of favouring affluent inmates". www.thehitavada.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
  7. "Activist Binayak Sen released from Raipur Central Jail". India Today (in ஆங்கிலம்). April 18, 2011. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராய்ப்பூர்_மத்திய_சிறை&oldid=3737059" இலிருந்து மீள்விக்கப்பட்டது