உள்ளடக்கத்துக்குச் செல்

பினாயக் சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினாயக் சென்
2009 இல் பினாயக் சென்
பிறப்பு4 சனவரி 1950 (1950-01-04) (அகவை 75)
தேசியம்இந்தியர்
கல்விகுழந்தைநல மருத்துவர்
படித்த கல்வி நிறுவனங்கள்கிறித்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்
பணிபொது சுகாதார நிபுணர், மனித உரிமை ஆர்வலர்
அமைப்பு(கள்)மக்கள் சிவில் உரிமைக் கழகம்
அறியப்படுவதுமனித உரிமை ஆர்வலர்[1]
சமயம்இந்து
Criminal penaltyஆயுள் தண்டனை
பெற்றோர்அனசுயா சென் (தாயார்)[2]
வாழ்க்கைத்
துணை
இலீனா சென்[3]
பிள்ளைகள்பிரன்கிதா சென் (மகள்),
அபரஜிதா சென் (மகள்)[4][5]

பினாயக் சென் (Binayak Sen) என்பவர் இந்தியாவை சார்ந்த ஓர் குழந்தை மருத்துவர் மற்றும் பொது சுகாதார நிபுணராவார். சத்தீசுகர் மாநிலத்தைச் சார்ந்த இவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) தேசிய துணைத் தலைவராவார்.[6] [7]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

பினாயக்கின் மனைவி இலீனா சென் ஆவார்.[8]பிரன்கிதா சென் மற்றும் அபரஜிதா சென் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.[9][10] பினாயக் சென், வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் பயின்ற பட்டதாரி ஆவார். அவரது குழுவின் சிறந்த மாணவர்களில் ஒருவரான பினாயக், 1970-களின் முற்பகுதியில் குழந்தைகளுக்கான மருத்துவத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பிறகு, பல ஆண்டுகளாக, ஏழை சமூகங்களில் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.[11]

சமூக ஆர்வம்

[தொகு]

இவர் சமூக மீதான தன்னார்வம் கொண்டவர் ஆவார். மருத்துவர் சென் குடிசார் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்.[12]

வழக்குகள்

[தொகு]

பினாயக், மே 2007 இல் பிலாஸ்பூர் நகரில் மாவோயிஸ்ட் தலைவர் நாராயண் சன்யாலுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார்.[13]சத்தீஸ்கரில் உள்ள கீழ் நீதிமன்றம், இந்தியாவின் பல பகுதிகளில் செயல்படும் கிளர்ச்சியாளர்களுக்கு செய்திகளை எடுத்துச் சென்றது மற்றும் வங்கிக் கணக்குகளை அமைத்தது போன்றவற்றில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.[14] 2009 மார்ச் 15 இல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பிணையில் விடுவிக்கப்பட்டார். அப்போது அவர் "இந்த நாட்டு மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்ததில்லை என்பதை நான் என் இதயத்தில் அறிவேன்" என்று பினாயக் கூறினார்.[15][16]

விருதுகள்

[தொகு]

ஏழை மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கான இவரது சேவைகளுக்காக உலகளாவிய ஆரோக்கியம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஜொனதான் மேன் (Jonathan Mann) விருது வழங்கப்பட்டது.[17][18]


மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Call to free India rights activist Binayak Sen". BBC. 28 December 2010. http://www.bbc.co.uk/news/world-south-asia-12084785. பார்த்த நாள்: 16 March 2011. 
  2. "My son is innocent, says Binayak Sen's mother". www.thehindu.com. Retrieved 2025-03-15.
  3. "Activist Ilina, wife of Binayak Sen, passes away". timesofindia.indiatimes.com. Retrieved 2025-03-15.
  4. "Life term for Binayak Sen". www.thehindu.com. Retrieved 2025-03-15.
  5. "Binayak Sen released on bail". www.thehindu.com. Retrieved 2025-03-15.
  6. "Who is Dr Binayak Sen?". timesofindia.indiatimes.com. Retrieved 2025-03-15.
  7. "European Union: EU team to track Binayak Sen's SC hearing". timesofindia.indiatimes.com. Retrieved 2025-03-15.
  8. "Activist Ilina, wife of Binayak Sen, passes away". timesofindia.indiatimes.com. Retrieved 2025-03-15.
  9. "Life term for Binayak Sen". www.thehindu.com. Retrieved 2025-03-15.
  10. "Binayak Sen released on bail". www.thehindu.com. Retrieved 2025-03-15.
  11. "Who is Dr Binayak Sen?". timesofindia.indiatimes.com. Retrieved 2025-03-15.
  12. "Who is Dr Binayak Sen?". timesofindia.indiatimes.com. Retrieved 2025-03-15.
  13. "Indian activist Binayak Sen released from prison". www.bbc.com. Retrieved 2025-03-15.
  14. "Indian activist Binayak Sen released from prison". www.bbc.com. Retrieved 2025-03-16.
  15. "Binayak Sen released on bail". www.thehindu.com. Retrieved 2025-03-15.
  16. "Indian human rights activist Binayak Sen to be released on bail". www.amnestyusa.org. Retrieved 2025-03-15.
  17. "Indian activist Binayak Sen released from prison". www.bbc.com. Retrieved 2025-03-15.
  18. "Jonathan Mann". en.wikipedia.org. Retrieved 2025-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாயக்_சென்&oldid=4247182" இலிருந்து மீள்விக்கப்பட்டது