இராமநிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமநிலையம் (மலையாளம் :രാമ നിലയം; ஆங்கிலம்:Ramanilayam) என்பது இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள கேரள அரசுக்குச் சொந்தமான ஒரு விருந்தினர் இல்லமாகும்.[1]

விளக்கம்[தொகு]

இந்த கட்டிடம் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. விருந்தினர் மாளிகையாக மாற்றப்படுவதற்கு முன்பு, இது ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் அதிகாரிகளுக்கான இல்லமாக இருந்தது. விருந்தினர் மாளிகையில் மூன்று தொகுதிகளில் 30 அறைகளும், இரண்டு சிறப்பு விருந்தினர் அறைகளும் உள்ளன. அறை ஒதுக்கீட்டில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அதிக முன்னுரிமை பெறுகின்றனர். மேலும் இங்கு 40 அறைகளைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.[1] கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இதனை நிர்வகிக்கிறது. அரசு விருந்தினர் மாளிகை என்பதால், கேரள அரசியல் வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகளுக்குச் சாட்சியாக உள்ளது.[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Ramanilayam". Malayala Manorma. Archived from the original on March 7, 2012. பார்க்கப்பட்ட நாள் 2010-06-28.
  2. "Public Hearing for Athirappally Hydro-electric project". The Hindu (7 February 2002). Archived from the original on 24 February 2002. பார்க்கப்பட்ட நாள் 2010-07-18.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமநிலையம்&oldid=3389220" இலிருந்து மீள்விக்கப்பட்டது