இராமகுண்டம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இராமகுண்டம் Ramagundam | |
|---|---|
| தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தெலங்காணா |
| மாவட்டம் | பெத்தபள்ளி |
| மொத்த வாக்காளர்கள் | 1,59,953 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் மக்கன் சிங் ராஜ் தாக்கூர் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
இராமகுண்டம் சட்டமன்றத் தொகுதி (Ramagundam Assembly constituency) இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதி ஆகும். இது பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒன்றாகும். இதில் ராமகுண்டம் நகரமும் அடங்கும். இது பெத்தபள்ளி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
இந்திய தேசிய காங்கிரசின் மக்கன் சிங் ராஜ் தாக்கூர் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தற்போது உள்ளார்.[1]
மண்டலங்கள்
[தொகு]இராமகுண்டம் சட்டமன்றத் தொகுதி பின்வரும் மண்டலங்களை உள்ளடக்கியது:
| மண்டல் |
|---|
| ராமகுண்டம் நகர் |
| கமன்பூர் & பாலகுர்த்தி (ராமகுண்டம் கிராமம்) |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | சோமரபு சத்தியநாராயணா | சுயேச்சை | |
| 2014 | பாரத் இராட்டிர சமிதி | ||
| 2018 | கொருகண்டி சந்தர் | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | |
| 2023 | மக்கன் சிங் ராஜ் தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு | |