இராமகிரிக் கோட்டை
இராமகிரி கோட்டை | |
---|---|
கரீம்நகர் மாவட்டம், தெலுங்கானா, இந்தியா | |
![]() | |
இராமகிரி கோட்டை | |
வகை | கோட்டை |
இடத் தகவல் | |
மக்கள் அனுமதி |
ஆம் |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 12-ம் நூற்றாண்டு |
கட்டியவர் | காக்கத்தியர்கள் |
கட்டிடப் பொருள் |
களிமண், கல் |
இராமகிரி கோட்டை அல்லது இராமகிரி கில்லா என்பது தென்னிந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலையின் உச்சி ஆகும். [1]
அமைவிடம்
[தொகு]இக்கோட்டையானது, கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள கமன்பூர் மண்டலத்தில் பேகம்பேட்டை கிராமத்தில் உள்ள இராமகிரி மலையில் அமைந்துள்ளது. இது மிகுந்த அடர்த்தியான காட்டுப்பகுதியில், மூலிகைத் தாவரங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது.[1] கோதாவரி ஆற்றையும் மனையாரையும் இக்கோட்டையிலிருந்து பார்க்க முடியும். [1]
இக்கோட்டை, கரீம்நகர் மாவட்டத் தலைநகரத்திலிருந்து சுமார் 65 கிமீ (40 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. [1]] கரீம்நகர் - மந்தானி நெடுஞ்சாலையில் கோட்டையின் அருகில் 2 கிமீ (1.2 மைல்கள்) தொலைவில் பேகம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. [1]
வரலாறு
[தொகு]இது 12-ம் நூற்றாண்டுகளில் வாராங்கல்லைச் சார்ந்த காக்கத்தியரால் கட்டப்பட்ட கோட்டையாகும். அதன்பிறகு குதுப் சாகி சுல்தான்தியால் கட்டுப்படுத்தப்பட்டது (1518–1687). 1656-ம் ஆண்டு, கோல்கொண்டாவின் ஆட்சியாளரான, அப்துல்லா குதுப் சாஹ், தன்னுடைய மருமகனுக்குப் (ஔரங்கசீப்பின் மகன்)[2]) பரிசாக அளித்தார். இக்கோட்டை பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு கட்டுப்பாட்டுக்கு 1791-ம் ஆண்டு வந்தது[1] சமசுகிருதக் கவிகளில் ஒருவரான காளிதாசன், மேகதூதம் என்ற பாடலை இராமகிரி கோட்டையைப் பற்றி பாடியுள்ளதாக வந்துள்ளபோதும், காளிதாசன் ஐந்தாம் நூற்றாண்டில் அதாவது இக்கோட்டை கட்டுவதற்கு முன் வாழ்ந்ததாக அறியப்படுகிறது.[2]
சிறப்பம்சங்கள்
[தொகு]
மூலிகைத் தாவரங்கள்
[தொகு]இக்கோட்டை அமைந்துள்ள இராமகிரி காடுகளில் மூலிகைத்தாவரங்கள் நிறைய உள்ளது. இங்குள்ள மருத்துவத் தாவரங்களை உள்ளூர் மக்கள் சேகரித்து, அருகிலுள்ள நகரங்களில் விற்பனை செய்கின்றனர். மாணவர்களும் இம்மூலிகைகளைக் கண்டறியவும், கற்றுக்கொள்ளவும் இப்பகுதிக்கு வருகின்றனர்.
இக்கோட்டையை மருத்துவ மூலிகைகள் காப்பகமாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. [1]
குறிப்புகள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Congress, Indian History (1990). Proceedings – Indian History Congress. p. 775.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Congress, Indian History (1990). Proceedings – Indian History Congress. p. 775.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Congress, Indian History (1990). Proceedings – Indian History Congress. p. 775.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)