இராத்து அக்கேலி ஏய் (2020 இந்தி திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராத்து அக்கேலி ஏய்
நெட்பிளிக்சு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்அனி திரெகான்
தயாரிப்புஅபிசேக்கு சௌபி
உரோனி கிரூவலா
கதைசுமிதா சிங்கு
இசைபின்னணி:
கரன் குல்கர்னி
பாட்டு:
சினேகா கான்வல்கர்
நடிப்பு
ஒளிப்பதிவுபங்கச்சு குமார்
படத்தொகுப்புஏ. சிறீக்கர் பிரசாத்து
கலையகம்ஆர்.எஸ்.வி.பி மூவீசு
விநியோகம்நெட்பிளிக்சு
வெளியீடுசூலை 31,2020
ஓட்டம்149 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

இராத்து அக்கேலி ஏய் (தமிழாக்கம்: இரவு தனிமையானது) 2020 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய இந்தி மொழித் திகில் திரைப்படம் ஆகும். [1] இது ஒரு நெட்பிளிக்சு பிரத்யேகத் திரைப்படம்.

கதைக்கரு[தொகு]

செல்வந்தர் இரகுவீர் சிங்கின் கொலையை விசாரிக்கச் செல்லும் நேர்மையான காவல் அதிகாரி சடில் யாதவ், இரகுவீரின் இரண்டாம் மனைவி இராதாவின் மீதான காதலுக்கும் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களால் ஏற்படும் குழப்பத்திற்கும் நடுவே கொலையாளி யார் என்று கண்டுபிடிப்பாரா என்கிற நோக்கில் கதை நகர்கிறது. [2]

நடிகர்கள்[தொகு]

சடில் யாதவ்
என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்தார்
நவாசுதீன் சித்திகி
இந்த கதாப்பாத்திரம் இரகுவீர் சிங்கென்ற செல்வந்தரின் கொலையை விசாரிக்கும் ஒரு நேர்மையான காவல் அதிகாரி.
ராதா
என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார்
ராதிகா ஆப்தே
வயதானவரான இரகுவீர் சிங்கிற்கு இரண்டாவது மனைவியாக வாக்கப்பட்டு அவரது குடும்பத்தினரால் பழிசாட்டப்படும் ஒரு பெண் கதாப்பாத்திரம்.

இத்திரைப்படத்தில் சுவேதா திரிபாதி, திக்கமன்சு தூலியா, சிவானி இரகுவன்சி, ஆதித்யா சிரீவசுட்டவா, இலா அருண் மற்றும் பத்மாவதி இராவ்வு ஆகியோரும் நடித்திருந்தனர். [3]

தயாரிப்பு மற்றும் வெளியீடு[தொகு]

இத்திரைப்படத்தை உத்தரப் பிரதேசத்தின் இலக்னோ மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் படமாக்கினர். [4] இத்திரைப்படம் நெட்பிளிக்சின் பிரத்யேகத் திரைப்படமாக 31 சூலை 2020 அன்று வெளியானது.

வரவேற்பு[தொகு]

என்டிடிவியின் சைபல் சட்டர்சி இத்திரைப்படத்திற்கு ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்தார். [5] இந்தியன் எக்சுபிரசின் சுபுரா குப்தா ஐந்துக்கு மூன்று மதிப்பெண்கள் அளித்தார். [6] ஐ. எம். டி. பி இணையத்தளத்தில் இத்திரைப்படத்திற்கு பத்துக்கு ஏழுப்புள்ளி மூன்று மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. [7]

ஒலிப்பதிவு[தொகு]

இராத்து அக்கேலி ஏய்
ஒலிப்பதிவு by
சினேகா கான்வல்கர்
வெளியீடு28 ஆகத்து 2020[8]
ஒலிப்பதிவு2019
இசைப் பாணிபிரத்யேகத் திரைப்பட ஒலிப்பதிவு
நீளம்13:00
மொழிஇந்தி
இசைத்தட்டு நிறுவனம்சீ மியூசிக் கம்பெனி
சினேகா கான்வல்கர் chronology
கூம்கேது
(2020)
இராத்து அக்கேலி ஏய்
(2020)
யூடியூபில் Raat Akeli Hai - Full Album

மேற்கோள்[தொகு]