இராத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராத்திரி
சகோதரன்/சகோதரிஉஷா (சகோதரி)[1]
நூல்கள்வேதம்
இராத்திரி ஒரு இந்து தெய்வம், அவர் இரவின் உருவம். நிலாவுடன் குழப்பமடைய வேண்டாம். மேலே: அரியானா, ரிசிகேசில் இரவு நேர வானம்.

இராத்திரி (Ratri) ( சமக்கிருதம்: रात्रि ) நிஷா என்றும் குறிப்பிடப்படும் இது இந்து சமயத்திலுள்ள ஒரு வேத தெய்வம்.[2] இவர் இரவின் உருவமாக அறியப்படுகிறார்.[3] இராத்திரியைப் பற்றிய பெரும்பாலான குறிப்புகள் இருக்கு வேதத்தில் காணப்படுகின்றன. மேலும் இவர் விடியலின் உருவமான உஷாவிம் சகோதரியாகவும் விவரிக்கப்படுகிறார். உஷாவுடன் சேர்ந்து, இவர் ஒரு சக்திவாய்ந்த தாயாகவும், முக்கிய சக்தியை வலுப்படுத்துபவராகவும் குறிப்பிடப்படுகிறார். இவர் பிரபஞ்சத்தின் சுழற்சி தாள வடிவங்களை பிரதிபலிக்கிறார். இவரது உடல் தோற்றம் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் இவர் ஒரு அழகான கன்னியாக விவரிக்கப்படுகிறார். [4]

இருக்கு வேதத்தில் ஒரு பாடலும் அதர்வண வேதத்தில் ஐந்து பாடல்களும் இவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. பிற்கால தாந்த்ரீக நூல்களில் இவர் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார். இவர் இருக்கு வேதத்தில் உஷா, இந்திரன், ருதம், சத்யாவுடன் தொடர்புடையவர். அதேசமயம் அதர்வண வேதத்தில்சூரியனுடன் தொடர்புடையவராகவும் இருக்கிறார். பிராமணங்களும் சூத்திர இலக்கியங்களும் இராத்திரியைக் குறிப்பிடுகின்றன.[5]

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராத்திரி&oldid=3610867" இருந்து மீள்விக்கப்பட்டது