இரவீந்திர நாத் மகதோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவீந்திரநாத் மகதோ
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் சபாநாயகர்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 சனவரி 2020
முன்னையவர்தினேஷ் ஓரான்
சட்டப் பேரவை உறுப்பினர்
ஜார்க்கண்டின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 2014
முன்னையவர்சத்யானந்த் ஜா
தொகுதிநாலா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2005–2009
முன்னையவர்டாக்டர். விஸ்வேஸ்வர் கான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 சனவரி 1960 (1960-01-12) (அகவை 64)
பாடன்பூர், ஜம்தாரா, பீகார் (தற்போதைய சார்க்கண்டு)
அரசியல் கட்சிஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
பிள்ளைகள்2 (குணால் காஞ்சன் யாதவ், பிரியங்கா)
வாழிடம்(s)பராவா ஜம்தாரா, ஜார்க்கண்ட்

இரவீந்திரநாத் மகதோ (Rabindra Nath Mahato) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், தற்போது ஜார்கண்ட் சட்டமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றுகிறார். [1] இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த தலைவர். இவர் தனது தந்தை வழி இடமான ஜம்தாராவிற்கு அருகில் உள்ள பாடன்பூர் என்ற ஊரில் 1960 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை ஓய்வுபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர். தற்போது அவர் ஜார்க்கண்டின் பராவா, ஜம்தாராவில் வசிக்கிறார்.

கல்வி[தொகு]

இரவீந்திரநாத் மகதோ ஒரு தொழில்முறை பட்டதாரி ஆவார். இவர் பகல்பூரில் உள்ள பகல்பூர் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றார். இவரும் இளங்கலை கல்வியியல் பட்டத்தை ஒடிசாவின் உத்கல் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

ஜம்தாரா ஜார்க்கண்டின் பராவாவில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் விஸ்வேஷ்வர் கானை எதிர்த்து போட்டியிட்டு அந்தத் தேர்தலில் தோற்றார்.

ஜார்க்கண்ட் இயக்கத்தின் போது அவர் சிபு சோரனுடன் சேர்ந்தார். விரைவில் அவரது தலைமைத்துவம் மற்றும் எளிமையான ஆளுமை காரணமாக அவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் விருப்பத்திற்குரிய தலைவரானார்.

பின்னர் இவர் 2005 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் நாலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். ஆனால், 2014 மற்றும் 2019 தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெறுவதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டுத் தேர்தலில் தோல்வியடைந்தார். 2019 சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைத்தது. ஜார்கண்ட் சட்டசபையின் 7 ஆம் சபாநாயகராக மகதோ தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மாநிலத்தின் சபாநாயகராக இவர் சட்டமன்றப் பணிகளை மேம்படுத்த முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். இந்த மாநிலத்தின் சட்டசபை கடந்த காலங்களில் அடிக்கடி இடையூறுகளை சந்தித்திருந்தது. மகதோ, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு போதிய வாய்ப்புக் கொடுத்து அவர்களை வாதத்தினை முடிக்கும் வரை பேச அனுமதித்தார். சமீபத்தில் அவரது வழிகாட்டுதலின் கீழ் ஜார்க்கண்ட் சட்டசபை அதன் 20 ஆம் நிறுவன தினத்தைக் கொண்டாடியது. [2]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. Rabindra Nath Mahato elected as Jharkhand Assembly Speaker - The Economic Times https://m.economictimes.com/news/politics-and-nation/rabindra-nath-mahato-elected-as-jharkhand-assembly-speaker/articleshow/73134448.cms
  2. https://www.moneycontrol.com/news/india/jmm-mla-rabindra-nath-mahato-elected-as-jharkhand-assembly-speaker-4792551.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவீந்திர_நாத்_மகதோ&oldid=3210093" இலிருந்து மீள்விக்கப்பட்டது