இரவீந்திர கலாசேத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவீந்திர கலாசேத்ரா
பொதுவான தகவல்கள்
முகவரிஜே. சி. சாலை,
புட்ட்ன்னா செட்டி டவுன் ஹால்
திறக்கப்பட்டது9 மார்ச் 1963
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)சார்லசு வில்சன்[1]
பிற தகவல்கள்
இருக்கை திறன்900[2]
வலைதளம்
http://kalakshetra1.kannadasiri.co.in/
இரவீந்திர கலாசேத்திராவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது

இரவீந்திர கலாசேத்ரா ( Ravindra Kalakshetra ) பெங்களூரில் உள்ள ஒரு கலாச்சார மையமாகும். இது இசை மற்றும் நாடக நிகழ்ச்சிகளுக்கான அரங்கமாக உள்ளது. பெங்களூரு நகரின் மையத்தில் அமைந்துள்ள இது நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நூற்றாண்டு நினைவாக கட்டப்பட்டது.[2] உமாஸ்ரீ, முக்யமந்திரி சந்துரு, த. சீ. நாகாபரணா, மாஸ்டர் ஹிரண்ணையா, சி. ஆர். சிம்ஹா, த. ந. சீதாராம், மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற பல பிரபல நாடக மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் கலாசேத்திராவில் நடித்துள்ளனர்.

வரலாறு[தொகு]

1959 ஆம் ஆண்டில், கலாசேத்திராவைக் கட்டுவதற்கு அப்போதைய முதல்வர் பசப்பா தனப்பா ஜாட்டியின் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதில் சிவராம காரந்த், மல்லிகார்ஜுன மன்சூர், கொரூர் ராமசாமி ஐயங்கார், மைசூர் டி. சௌடையா மற்றும் விமலா ரங்காச்சார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். மாபெரும் கவிஞரும் நோபல் பரிசு பெற்றவருமான இரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டது. அவர்கள் நிதி சேகரிக்கத் தொடங்கினர். பிரபல தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் போன்ற பிரபலங்கள் கலாசேத்திராவைக் கட்டுவதற்கு பங்களிக்க முன்வந்தனர்.[2] 16 செப்டம்பர் 1960 அன்று கலாசேத்திரத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இது கட்டிடக் கலைஞர் சார்லசு வில்சன் மற்றும் தலைமைப் பொறியாளர் பி. ஆர். மாணிக்கம் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. கலாசேத்ரா இறுதியில் 9 மார்ச் 1963 அன்று கருநாடகாவின் அப்போதைய மத்திய கல்வி அமைச்சராக இருந்த முனைவர் உமாயூன் கபீரால் திறந்து வைக்கப்பட்டது.[2]

வசதிகள்[தொகு]

கலாசேத்ராவில் 900 இருக்கைகள் கொண்ட நவீன மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உருவாக்கப்பட்ட கலையரங்கம் உள்ளது.[2] திரையரங்கம் முழுவதும் கணிணியால் இயக்கப்படும் 120 விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பிரபல கன்னட நாடக ஆசிரியரான சம்சாவின் பெயரில் ‛சம்சா பயலு ரங்கமந்திரா' என்ற திறந்தவெளி அரங்கமும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவீந்திர_கலாசேத்ரா&oldid=3917672" இலிருந்து மீள்விக்கப்பட்டது