உமாஸ்ரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமாஸ்ரீ
குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர்
பதவியில்
மே 20, 2013 – மே 15, 2018
முன்னவர் கலகப்பா ஜி. பாண்டி
பின்வந்தவர் ஜெயமாலா
கன்னட கலாச்சாரத்துறை அமைச்சர்
பதவியில்
20 மே ,2013 – 15 மே, 2018
முன்னவர் கோவிந்த் எம். கர்ஜோல்
பின்வந்தவர் ஜெயமாலா
அமைச்சர்
பதவியில்
17 மே 2013 – 15 மே 2018
முன்னவர் சித்து சாவடி
பின்வந்தவர் சித்து சாவடி
தொகுதி தெர்தல்
தனிநபர் தகவல்
பிறப்பு உமாஸ்ரீ
10 மே 1957 (1957-05-10) (அகவை 66)
நோனாவினகரே,திப்தூர், தும்கூர் மாவட்டம்,
கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
தொழில் நடிகர் (1978-present)
அரசியல்வாதி (-present)

உமாஸ்ரீ (Umashree பிறப்பு 10 மே 1957) ஓர் இந்திய நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். கன்னட மொழியில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான குலாபி டாக்கீசில் குலாபி கதாப்பத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினரானார். [1] சித்தராமையாவின் அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை, கன்னட மொழி மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சரானார். [2] [3]

சொந்த வாழ்க்கை[தொகு]

உமாஸ்ரீ தேவாங்கர் குடும்பத்தில் பிறந்தவர்.[4] [5] இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், மகள் காயத்ரி, பல் மருத்துவராகவும், மகன் விஜயகுமார் வழக்குரைஞராகவும் உள்ளார்.

சமூகப் பணி[தொகு]

கிராமப்புற மற்றும் பின்தங்கிய பெண்களுக்கு ஆதரவளிப்பது போன்ற சமூக நடவடிக்கைகளில் கலந்துகொண்டுள்ளார். கிராமப்புற பெண்களின் தேவைகளை முன்னிலைப்படுத்த மேடை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். 2013 இல் தெர்தல் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உமாஸ்ரீ பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, கன்னட மொழி மற்றும் கலாச்சார அமைச்சராக உள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "Karnataka 2013." Myneta website, National Election Watch. Accessed 21 February 2014.
  2. "Writer's remarks on Umashree draw flak." The Hindu Bangelore, 9 February 2014.
  3. Nandakumar P. "Karnataka: Umashree lone woman minister." பரணிடப்பட்டது 2013-06-10 at the வந்தவழி இயந்திரம் Deccan Chronicle 18 மே 2013. Accessed 21 February 2014
  4. "Siddharamaiah, increases Quota in Cabinet". https://timesofindia.indiatimes.com/city/bengaluru/Ahead-of-2018-polls-CM-Siddaramaiah-increases-Lingayat-quota-in-Cabinet/articleshow/52837174.cms. 
  5. "Terdal Election News". http://www.dnaindia.com/bangalore/report-ex-cop-bidari-pitted-against-cine-star-umashree-at-assembly-polls-1810924. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமாஸ்ரீ&oldid=3627114" இருந்து மீள்விக்கப்பட்டது