இரயிசு கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உஸ்தாத்
இரயிசு கான்
Ustad Rais Khan.jpg
2013இல் ஒரு நிகழ்ச்சியில் இரயிசு கான்
பின்னணித் தகவல்கள்
பிறப்புநவம்பர் 25, 1939(1939-11-25)
இந்தோர், மத்தியப் பிரதேசம், பிரித்தானிய இந்தியா
இறப்பு6 மே 2017(2017-05-06) (அகவை 77)
கராச்சி, பாக்கித்தான்
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)கருவியிசை
இசைக்கருவி(கள்)சித்தார்
இசைத்துறையில்1948 – 2017
இரயிசு கான்
Ustad Rais Khan.jpg
திகதி2005
நாடுபாக்கித்தான்
வழங்கியவர்பெர்வேஸ் முஷாரஃப், பாக்கித்தானின் அதிபர்

உஸ்தாத் இரயிசு கான் (Rais Khan) (25 நவம்பர் 1939 – 6 மே 2017) இவர் ஒரு பாக்கிதானின் சித்தார் கலைஞராவாவர். இவர் 'எல்லா காலத்திலும் மிகச் சிறந்த சித்தார் கலைஞர்களில் ஒருவராக' கருதப்பட்டார். இவர் தனது வாழ்க்கையின் இறுதி வரை தொடர்ந்து நிகழ்த்தினார். [1] இவர் 1986இல் இந்தியாவிலிருந்து பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். 2017 ஆம் ஆண்டில், கான் பாக்கித்தானின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான சீதாரா-இ-இம்தியா விருதினை பெற்றார் .

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கான் நவம்பர் 25, 1939 அன்று பிரித்தானிய இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிறந்து, [2] பின்னர், மும்பையில் வளர்ந்தார். இவரது பயிற்சி மிகச் சிறிய வயதிலேயே, ஒரு சிறிய தேங்காய் ஓடு சித்தாரில் தொடங்கியது. [3] 1986 ஆம் ஆண்டில் பாக்கித்தான் பாடகர் பில்கீசு கானும் என்பவரை தனது நான்காவது மனைவியாக்கிக் கொண்டு பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். இவர்களுக்கு இரு மகன்களும், [4] நான்கு மகன்களும் உள்ளனர். [5] [6]

இவரது தாயார் ஒரு பாடகியாவார். இவரது தந்தை ஒரு வீணைக் கலைஞராவார். [7][4]

இவர் ஒரு பாடகராகவும் இருந்தார், மேலும் 1978 ஆம் ஆண்டில் பிபிசி இலண்டனுக்காக 'குங்ரூ டூட் கெய்' என்ற பாடலை சித்தாருடன் ஒரு கருவியாகப் பதிவு செய்த முதல் சித்தார் கலைஞராவார். [8] இவரது மாமா விலாயத் கானைப் போலவே, அவர் அடிக்கடி சித்தாருடன் பாடல்களைப் பாடினார். இவரும், செனாய் கலைஞர் பிசுமில்லா கானும் நவம்பர் 23, 2001 அன்று புதுதில்லியில் உள்ள இந்தியாவின் வாயிலில் ஒரு நிகழ்ச்சியின வழங்கினார்கள். .[9]

மரணம்[தொகு]

நீண்டகால நோய்க்குப் பிறகு, இவர் 6 மே 2017 அன்று கராச்சியில் தனது 77 வயதில் இறந்தார். [10] [11]

குறிப்புகள்[தொகு]

 1. "Eid ul Fitr Schedule 2016". Pakistan Television Corporation.
 2. "Sitar legend Ustad Raees Khan passes away". Samaa TV. 7 May 2017. https://www.samaa.tv/entertainment/2017/05/sitar-legend-ustad-raees-khan-passes-away/. 
 3. "'Today, music is about cloning' (interview with Rais Khan)". தி இந்து (newspaper). 29 October 2005. http://www.hindu.com/thehindu/mp/2005/10/29/stories/2005102900260200.htm. 
 4. 4.0 4.1 "Profile: The string maestro". Dawn (newspaper). November 18, 2012. https://www.dawn.com/news/764879. 
 5. Salman (7 May 2017). "OBITUARY: The sitar has fallen silent". Dawn (newspaper). https://www.dawn.com/news/1331622. 
 6. Lodhi (7 May 2017). "Renowned sitarist Ustad Raees Khan passes away". தி எக்சுபிரசு திரிப்யூன் (newspaper). https://tribune.com.pk/story/1403595/renown-sitarist-ustad-raees-khan-passes-away/. 
 7. Manuel, Peter Lamarche (1989). Ṭhumrī in Historical and Stylistic Perspectives. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120806733. https://books.google.com/books?id=PlNShmx3x68C&pg=PA173. பார்த்த நாள்: 7 May 2017. 
 8. "Pakistani film database 1969". cineplot.com.
 9. "A superb recital by sitar maestro". The News International (newspaper). 30 March 2009. https://www.thenews.com.pk/archive/print/168566-a-superb-recital-by-sitar-maestro. 
 10. "Pakistani sitar maestro Ustad Raees Khan dead at 77". Firstpost. Indo-Asian News Service. 7 May 2017. http://www.firstpost.com/entertainment/pakistani-sitar-maestro-ustad-raees-khan-dead-at-77-3429208.html. 
 11. "Sitar maestro Ustad Raees Khan passes away". Geo News (TV channel). May 7, 2017. https://www.geo.tv/latest/140814-Sitar-maestro-Ustad-Raees-Khan-passes-away. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரயிசு_கான்&oldid=3092837" இருந்து மீள்விக்கப்பட்டது