ஈமோஃபீலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரத்தம் உறையாமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஈமோஃபீலியா (Haemophilia அல்லது Hemophilia) என்பது, மனித உடலில் குருதி உறையாமல் போகும் பரம்பரை நோயின் பெயராகும். மரபணு குறைபாடுகளின் காரணமாக (அல்லது, மிக அரிதான சமயங்களில், தன்னுடல் தாக்குநோய் (autoimmune disorder) காரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் குருதி நீர்மக் (Plasma) காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந் நோய் உண்டாகிறது. உடலில், உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து குருதிப்பெருக்கு ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று.

வகைகள்[தொகு]

X-இணைந்த பின்னடைவு

ஒத்த நோயான வான் வில்லர்பிராண்டு நோய் இம்மூவகை இரத்த உறையாமைகளைவிட வலுக்குன்றியதாகும். வான் வில்லர்பிராண்டு வகை மூன்று மட்டும் ஓரளவு வலுவுடையது. இது இரத்த உறைதலுக்கு காரணமான ஒரு புரதமான வான் வில்லர்பிராண்டு காரணியில் ஏற்படும் மாறுதலால் ஏற்படுகிறது. இரத்த உறைதலில் ஏற்படக்கூடிய சிக்கல்களில் பரவலாகக் காணப்படுவது இது.

நோய் வரும் முறை[தொகு]

ஈமோஃபீலியா நோய்க்குக் காரணமாக X நிறப்புரியில் உள்ள பின்னடைவான மாற்றுருக்கள் (alleles) காணப்படுகின்றன.

இலிங்க நிறப்புரிகளைப் பொறுத்தவரையில் பெண்கள் இரண்டு X நிறப்புரிகளைக் கொண்டுள்ளனர், ஆண்கள் ஒரு Xஉம் ஒரு Yஉம் கொண்டுள்ளனர். X நிறப்புரியிலேயே குருதி உறைதற்காரணிக்குரிய மரபணு காவப்படுகிறது, Y நிறவுடலில் இவை காவப்படுவதில்லை. மனித உடலில், ஏனைய விலங்குகளைப் போலவே, இருமடிய நிலை பேணப்படுவதனால், அங்கே ஒரு குறிப்பிட்ட மரபணுவிற்குரிய இரு மாற்றுருக்கள் காணப்படும். அவையிரண்டும் ஒரே மாதிரியானவையாகவோ (Homozygous), வேறுபட்டவையாகவோ (Heterozygous) இருக்கலாம்.

ஆண்களில் ஒரு X நிறப்புரி மட்டுமே இருப்பதனால், X நிறப்புரியினால் காவப்படும் ஒரு இயல்பிற்குரிய மாற்றுருவில் ஒன்று மட்டுமே ஆண்களில் இருக்கும். பெண்களில் இரு X நிறப்புரிகள் இருப்பதனால் இரு மாற்றுருக்களும் காணப்படும். ஆண்களில் இந்த மாற்றுருக்களில் ஆட்சியுடைய ஒரு அலகு காணப்படுமாயின், நோய் வெளிப்படாது. ஆனால் பின்னடைவான மாற்றுருவாக அது இருப்பின் நோய் வெளிப்படும்.

பெண்களில் X நிறப்புரியில் இரு மாற்றுருக்கள் இரண்டும் ஆட்சியுடையதாகவோ, அல்லது ஏதாவது ஒன்று மட்டும் ஆட்சியுடையதாகவோ இருப்பின், பெண் நோயற்றவராக இருப்பார். ஆனால் ஆட்சியுடைய ஒரு மாற்றுருவையும், பின்னடைவான ஒரு மாற்றுருவையும் கொண்டவர் நோயைக் காவும் தன்மை உடையவராக இருப்பார். பெண்ணுக்கு கிடைக்கும் ஒரு மாற்றுரு ஆணிலிருந்து பெறப்படுவதனால், அது அனேகமாக ஆட்சியுடையதாகவே இருப்பதற்கான சந்தர்ப்பமே அதிகமாக இருப்பதனால் பெண்ணுக்கு கிடைக்கும் இரு மாற்றுருக்களும் பின்னடைவானதாக இருப்பதற்கான நிகழ்தகவு மிகமிகக் குறைவாகவே இருக்கும்.

சிகிச்சை[தொகு]

இதுவரை இந்நோய்க்கு சிகிச்சை ஏதுமில்லை எனினும், அவசியப்படும் பொழுது (ஈமோஃபீலியா Aக்கு காரணி VIII, ஈமோஃபீலியா Bக்கு காரணி IX) குருதி உறைதற்காரணிகளை ஊசி மூலம் நோயாளியின் உடலில் செலுத்தலாம். இதனால் தற்காலிகமாக இரத்த ஒழுக்கு சரி​ செய்யப்பட்டு நிறுத்தப்படுகின்றது.​பொதுவாக இரத்த உ​றைதற்கான காரணிகள் மனிதர்களின் உடலில் இருந்து தானமாகப் ​பெறப்படும் குருதிகளில் இருந்து பிரித்​தெடுக்கப்பட்டு உ​றைநி​லைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. இதில் இரத்தத்​தொற்று ​நோய்கள் பரவும்அபாயம் காணப்படுகின்றது. ஆனால் தற்காலத்தில்​ செயற்க்​கையாக உருவாக்கப்பட்ட குருதி உ​றைக்காரணிக​ளையும் தயார் ​செய்கின்றனர். இதில் அபாயங்கள் காணப்படுவதில்​லை. குருதிஉ​றைதற்காரணிக​ளை அதிகமாக பயன்படுத்துவதனால் உடலில் ஒரு எதிர்ப்பு தனிப்பி​ தோன்றிவிடுகிறது. அச்ச​மயங்களில் அதிக வலுவான காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன.

வரலாறு[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈமோஃபீலியா&oldid=2522114" இருந்து மீள்விக்கப்பட்டது