இரண்டாம் பிருதிவிபதி
Appearance
மேலைக் கங்க மன்னர்கள் (350–999) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இரண்டாம் பிருதிவிபதி (இறப்பு: 940) என்பவன் ஒரு கங்க அரசனாவான். இவன் சோழர்களுடன் நட்புறவு கொண்டிருந்தான். இவன் காலத்தில் கங்க நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது இவன் ஒரு அணியாகவும் இரண்டாம் பூதுகன் ஒரு அணியாகவும் செயல்பட்டனர்.
போர்கள்
[தொகு]இராஷ்டிரகூடர்களுடன் தொண்டை நாட்டில் உள்ள வாணகபாடி நாட்டின் மன்னன் பாணன் இரண்டாம் விசயாதித்தன் சேர்ந்துகொண்டு சோழன் பராந்தகனை எதிர்த்துப் போர் செய்தான். இப்போரில் சோழனுக்கு ஆதரவாக அவர்களோடு இரண்டாம் பிருதிவிபதியும் போர்செய்தான். போரில் சோழனும் அவனைச் சார்ந்தவர்களும் வென்றனர். போரில் கங்கனின் உதவிக்குப் பரிசாகப் பராந்தக சோழன் அவனுக்கு இரு பாணர்களின் நாட்டையும் கொடுத்து மாவலி வாணராயன் என்ற பட்டத்தையும் அளித்தான்.
கருவி நூல்
[தொகு]தென்னாட்டுப் போர்க் களங்கள்,க. அப்பாதுரை.