பாணர் (குறுநில மன்னர்கள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாணர் என்பவர்கள் குறுநிலத் தலைவர்களாவர்.

இவர்கள் தங்களை மகாபலி சக்கரவர்த்தியின் வழியில் தோன்றியவர்களாகக் கூறிக்கொண்டனர்.[1]

ஆட்சிப்பரப்பு[தொகு]

சித்தூரின் மேற்கு, பழைய வடாற்காடு மாவட்டத்தின் வடமேற்கு, கருநாடக மாநிலத்தின் கோலார் பகுதியின் கிழக்கு, தகடூரின் சிலபகுதிகள், பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் சில பகுதிகள் பாணர் ஆட்சியின் கீழ் இருந்தன. இப்பகுதிகளில் பாணர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.[2]

தலைநகரம்[தொகு]

வேலூர் மாவட்டத்தின் இன்றைய திருவல்லமே அன்று வாணபுரம் என்னும் பெயரில் பாணர்களின் தலைநகராக இருந்தது. பல்லவர்களின் கொடியில் இருந்த நந்தி உருவத்தையே பாணர்களும் மேற்கொண்டனர்.

காலகட்டம்[தொகு]

கி.பி.4-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.16-ஆம் நூற்றாண்டுவரையில் பாணர்கள்பற்றிய குறிப்புகள் வரலாற்றில் காணப்படுகின்றன.[3] பாணர்கள் துவக்கத்தில் சாதவாகனர்களுக்கு அடங்கிய குறுநில மன்னர்களாக இருந்தனர் என்றும்,பின் பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாயினர் என்றும் கருதப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. அ.கிருட்டிணசாமி பல்லவர்கால குறுநில மன்னர்கள் தமிழ்நாட்டு வரலாறு,பல்லவர்-பாண்டியர் காலம் முதல் தொகுதி பக்.318-319
  2. ச.கிருஷ்ணமூர்த்தி,நடுகற்கள் பக்.231
  3. தகடூர்வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டிணன்.