அரிவர்ம மகாதிராயன்
மேலைக் கங்க மன்னர்கள் (350–999) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரிவர்ம மகாதிராயன் கங்க வம்சத்தின் 3ஆவது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலம் கி. பி. 247 என கூறுவாருண்டு ஆனால் ஆட்சிக்காலத்தை அறுதியிட்டுக் கூறும் சான்றுகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இவர் மாதவ மகாதிராயனின் மகன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1] [2]
தலவன்புரம்
[தொகு]கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் (தலவன்புரம்) தலக்காட்டை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், பல தேச மன்னர்களை வென்று அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும், கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெற்றும், தர்மம் என யார் வந்து கேட்டாலும் அவர்களுக்கு இல்லை என்று சொல்லாது தானம் செய்தான் எனவும், அநேக கவிஞர்களை தனது அரசவையில் வைத்து ஆதரித்து வந்தான் எனவும் அறியமுடிகிறது.[3]
தானசாசனம்
[தொகு]அரிவர்ம மகாதிராயன் தனது ஆட்சிக் காலத்தில் பல தான சாசனங்களைச் செய்துள்ளான் அவைகளில் ஒன்று- சாலிவாகன சகவருடம் 210 (கி. பி. 285)சௌமிய வருடம் பங்குனி மாதம் பௌர்ணமி வியாழக்கிழமை தகடூர் கிராமத்தை அவ்வூரில் குடியிருக்கும் போர்வீரர்களுக்கு 3 பங்கும், தகடூர் மூலஸ்தானேஸ்வரருக்கு பூசை செய்யும் பிராமணருக்கு ஒரு பங்கும் தானம் செய்தான். இத்தான சாசனம் கல்வெட்டு மூலஸ்தானேஸ்வரர் கோயில் மதிற்சுவற்றில் உள்ளது[4]
சிறப்புப் பெயர்
[தொகு]சிறந்த அரசாட்சி நடத்தியதால் ஸ்ரீமத் அரிஅர மகாதிராயன், தர்ம மகாதிராயன், மகாசூரன் என பட்டங்கள் பெற்றான் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி.[1]
சான்றாவணம்
[தொகு]- ↑ 1.0 1.1 கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
- ↑ [1]
- ↑ கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-99-100)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-
- ↑ கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-100)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954-
ஆதாரங்கள்
[தொகு]- Kongudesarajakkal , Government manuscript Library, Chennai