இரசாவ், புருனே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரசாவ் (ஆங்கிலம் : Rasau ) : புருனேயில் உள்ள ஒரு பகுதியாகும். இந்தப்பகுதி புருனேயின் இரண்டு எண்ணெய் வயல்களைக் கொண்டுள்ளது [1] மற்றும் 103 பேர் அடங்கிய "கம்போங் இரசாவ்" என்ற சிறிய கிராமமும் உள்ளது.[2]

இருப்பிடம்[தொகு]

இராசாவ் பெலைட் ஆற்றின் மேற்குக் கரையில் பெலைட் மாவட்டத்தில் அமைந்துள்ளது [1] கம்போங் சுங்கை டெராபனுக்கு தெற்கே, கோலா பெலைட்டின் மாவட்ட தலைநகருக்கு அருகில் அமைந்துள்ளது. இது முகிம் கோலா பெலைட்டில் உள்ள கிராமங்களில் ஒன்றாகும்.[3] இது 114 ° 11′E தீர்க்கரேகை மற்றும் 4 ° 34′N அட்சரேகையில் அமைந்துள்ளது. வடக்கே கம்போங் சுங்கை டெராபன் உள்ளது.மேற்கே மலேசிய மாநிலமான சரவாக் மற்றும் தெற்கே அசாம் பயா எண்ணெய் வயலுடன் தென்மேற்கில் அமைந்துள்ளது. கிழக்கே பெலைட் ஆற்றின் குறுக்கே கோலா பெலேட் மற்றும் கம்போங் சுங்கை துகோனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.

கம்போங் இரசாவ்[தொகு]

இங்கு கம்போங் இராசாவ் என்ற சிறிய கிராமம் இராசாவ் பாலத்தின் தெற்கே அமைந்துள்ளது. இங்கு 103 [2] பேர் மட்டுமே கொண்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது, இது முன்னர் வேட்டைக்காரர்கள் மற்றும் மீனவர்களின் கிராமமாக இருந்தது.

தற்போது கம்போங் இரசாவ் அருகிலுள்ள கோலா பெலைட்டின் புறநகராக செயல்படுகிறது. கம்போங் இராசாவில் வசிக்கும் கிராமவாசிகள் இரசாவ் பாலத்தக் கடக்க செலுத்த வேண்டியக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய சிறப்பு அனுமதி பெறகிறார்கள். இது கிராமவாசிகள் வேலை வாய்ப்புகளுக்காக பெலைட் ஆற்றின் குருக்கே வசதியாக பயணிக்க அனுமதிக்கிறது.

இராசாவில் உள்ள கம்போங் சுங்கை துகோனில் உள்ள கோலா பெலைட்டின் எதிர் கரையில் ஒரு கப்பல் தளம் அமைந்துள்ளது.[4] இது கிராமம் மற்றும் பெரிய கோலா பெலைட் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பின் முக்கிய ஆதாரமாக உள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு[தொகு]

இரசாவ் பகுதி புருனேயில் உள்ள இரண்டு கடல் எண்ணெய் வயல்களில் ஒன்றான ராசாவ் என்ணெய் புலத்தை கொண்டுள்ளது.. இந்த புலம் ராயல் டச்சு ஷெல் பெட்ரோலிய நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.1979 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது, இருப்பினும் இதிலிருந்து 1983 வரை உற்பத்தி தொடங்கப்படவில்லை. இராசாவ் பகுதியில் உள்ள இராசாவ் பாலத்தை சுங்கை துஜோவுடன் இணைக்கும் நெடுஞ்சாலைக்கு இடையில் பெரும்பாலான கிணறுகள் அமைந்துள்ளன. இருப்பினும், சில இராசாவ் கிணறுகள் கம்போங் சுங்கை துகோன் மற்றும் கம்போங் பாண்டனில் பெலேட் ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன.

இரசாவ் உற்பத்தி நிலையம் இரசாவ் பகுதியில் அமைந்துள்ளது. எண்ணெய்க் குழாய்கள் அதை செரியாவில் உள்ள சேகரிப்புக் கிடங்குகளுடன் முமோங் வழியாகவும் [5] கோலா பெலைட் வழியாக செரியாவின் சுத்திகரிப்பு நிலையத்துடனும் இணைக்கின்றன.[6] சரவாக் நகரில் உள்ள மலேசியாவின் அசாம் பயா புலத்திலிருந்து இரசாவ் பகுதியின் எல்லையைத் தாண்டி இராசாவுக்குள் ஹைட்ரோகார்பன்கள் குழாய்கள் பதிக்கப்படுகிறது

போக்குவரத்து[தொகு]

பந்தர் செரி பெகாவானிலிருந்து மலேசிய எல்லைக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலை இரசாவ் வழியாக செல்கிறது.[7] இது செரியா வெளி வட்டச் சாலை மற்றும் ரசாவ் பாலத்தை கம்போங் சுங்கை தெராபனுக்கும் சுங்கை துஜோவுக்கும் இடையிலான 11 கி.மீ சாலையுடன் இணைக்கிறது.

பெலைட் ஆற்றின் குறுக்கே உள்ள இரசாவ் பாலம் ஒரு சுங்கச்சாவடியாகும். இதில் பயணிகள் வாகனத்திற்கான கட்டணம் 3 புருனே டாலரும் [8] வணிக வாகனத்திற்கு கட்டணம் 20 புருனே டாலருக்கு மேலும் வசூலிக்கப்படுகிறது. கிராமத்தில் விமான நிலையங்கள் இல்லை. வணிகர்கள் வர்த்தக விமானத்தை பிடிக்க பந்தர் செரி பெகவன் அல்லது மிரிக்கு செல்ல வேண்டும்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 About BSP - History of Oil and Gas பரணிடப்பட்டது 15 மே 2007 at the வந்தவழி இயந்திரம் - retrieved 18-04-2007
  2. 2.0 2.1 Kg Sg Teraban Development Goes On Show In Belait, BruDirect 04-12-2006 பரணிடப்பட்டது 28 செப்டம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம் - retrieved 17-04-2007
  3. Poskod Baru Daerah Belait (Belait District New Postcodes) பரணிடப்பட்டது 2 ஏப்ரல் 2008 at the வந்தவழி இயந்திரம் - retrieved 18-04-2007
  4. Kuala Belait Shipyard பரணிடப்பட்டது 29 செப்டம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம் at Brunei Business Directory - retrieved 19-04-2007
  5. Police Close Mumong Bypass After Gas Leak - BruDirect 07-03-2006 பரணிடப்பட்டது 12 நவம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம் - retrieved 18-04-2006
  6. Page 16, Salaam August 2005 - retrieved 18-04-2007
  7. National Development Plan பரணிடப்பட்டது 5 ஏப்ரல் 2007 at the வந்தவழி இயந்திரம் of Brunei Darussalam. Government site retrieved 19-04-2007.
  8. Residents cry foul over Baram ferry closure பரணிடப்பட்டது 10 திசம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம் BruDirect 03-11-2005 - retrieved 18-04-2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசாவ்,_புருனே&oldid=2868258" இருந்து மீள்விக்கப்பட்டது