யூக்ளிடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இயூகிளிட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரேக்க அறிஞர் யூக்ளிடு

கிரேக்க நாட்டின் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த யூக்ளிடு அல்லது யூக்கிளிடீசு (Euclid, Εὐκλείδης) என்பார் கி.மு. 325 முதல் கி.மு. 265 வரை வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவருடைய வடிவவியல் நூலாகிய எலிமென்ட்ஃசு (Elements) என்பது 2200 ஆண்டுகளுக்கும் மேலாக மாந்தர் இனத்தைப் பெருமளவும் சிந்திக்க வைத்த பெரும் நூலாகும். இதில் 13 பெரும் பாகங்கள் (உள் நூல்கள்) உள்ளன. இவருடைய வடிவவியல் நூலின் வழி முதற்கோளாக (axiom) சில கருத்துக்களைக் கொண்டு முறைப்படி நிறுவும் (prove) கணிதவியலை தோற்றுவித்தார் என்று சொல்லலாம். இவருடைய எலிமென்ட்ஃசு என்னும் நூலில் வடிவவியல் மட்டும் இன்றி எண்கணிதத்திலும் பல அருமையான முடிவுகளை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக நூல் 10ல் 20ஆவது முன் வைப்பில் பகா எண்கள், எண்ணிக்கையில் அடங்காதவை என்று நிறுவியுள்ளார். வடிவயியலில் ஒரு பிரிவு யூக்ளீட் வடிவியல் என்று வழங்கப்படுகிறது.

வாழ்க்கை[தொகு]

யுக்ளிடிற்கு மிகக் குறைவான அசல் குறிப்புகள் உள்ளன, அவரின் வாழ்க்கை பற்றி மிகவும் குறைவாக அறியப்படுகிறது. அவரது பிறந்த மற்றும் இறப்பு தேதி, இடம் மற்றும் சூழ்நிலைகள் தெரியவில்லை மற்றும் அவருடன் குறிப்பிடப்பட்ட மற்றவர்களின் தோராயமாக மட்டுமே மதிப்பிடப்படலாம். ஆர்க்கிமிடீஸ் (கி.மு. 287 கி.மு. - கிமு 212 கி.மு.) பிற கிரேக்க கணிதவியலாளர்களால் பெயர் குறிப்பிடப்படவில்லை, மேலும் பொதுவாக "ὁ στοιχειώτης" ("கூறுகளின் எழுத்தாளர்") என அழைக்கப்படுகிறார். [1] யூக்ளிட் சில வரலாற்று குறிப்புகள் ப்ரெக்லஸ் சி வாழ்ந்து பல நூற்றாண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டது. 450 AD மற்றும் அலெக்ஸாண்டிரியாவின் பப்புஸ் c. 320 AD. [2]


மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

 • DeLacy, Estelle Allen (1963). Euclid and Geometry. New York: Franklin Watts. 
 • Knorr, Wilbur Richard (1975). The Evolution of the Euclidean Elements: A Study of the Theory of Incommensurable Magnitudes and Its Significance for Early Greek Geometry. Dordrecht, Holland: D. Reidel. ISBN 90-277-0509-7. 
 • Mueller, Ian (1981). Philosophy of Mathematics and Deductive Structure in Euclid's Elements. Cambridge, MA: MIT Press. ISBN 0-262-13163-3. 
 • Reid, Constance (1963). A Long Way from Euclid. New York: Crowell. 
 • Szabó, Árpád (1978). The Beginnings of Greek Mathematics. A.M. Ungar, trans. Dordrecht, Holland: D. Reidel. ISBN 90-277-0819-3. 
  • Heath (1981), p. 357
  • Joyce, David. Euclid. Clark University Department of Mathematics and Computer Science. [1]
  "https://ta.wikipedia.org/w/index.php?title=யூக்ளிடு&oldid=2323506" இருந்து மீள்விக்கப்பட்டது