இமானுவேல் சேகரன் நினைவு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இமானுவேல் சேகரன் நினைவு நாள் (Immanuvel Sekaran memorial day) ஆண்டுதோறும் இமானுவேல் சேகரன் இறந்த நாளான செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினரும், பள்ளர் இனத்தினரும் வேறுபல சமுதாய அமைப்பினரும் பங்கேற்கின்றனர். இமானுவேல் சேகரன், இந்திய ராணுவத்தில் பணியாற்றிப் பின்னர் தலித்களின் உரிமைகளுக்காகப் போராடியவராவார். இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராகவும், அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராசரின் அன்பைப் பெற்றவராகவும் இருந்தார்.

அரசியல் பின்புலம்[தொகு]

இமானுவேல் சேகரன் காங்கிரசு கட்சியில் இணைந்து காமராசரின் ஆதரவு பெற்றவராக இருந்தார். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் காங்கிரசு கட்சி பள்ளர் மற்றும் நாடார்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. மறவர் சமுதாயத்தின் ஆதரவை பார்வர்டு பிளாக் கட்சி பெற்றிருந்தது. 1957 இல் நடந்த இடைத்தேர்தலின் போது இராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மறவர் சமுதாயத்தினருக்கும், தலித் சமுதாயத்தினருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன. 1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டார்.[1]

விமர்சனம்[தொகு]

இமானுவேல் சேகரனின் நினைவுநாள் கொண்டாட்டத்தின் போது சாதிகளுக்கிடையேயான மோதல்கள் நிகழ்கின்றன.[2] சில அரசியல் கட்சிகள் வாக்குவங்கி நோக்கிலும் இந்நாளைக் கொண்டாடுகின்றன.[3] ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதியைச் சார்ந்த தலைவரை முன்னிறுத்தி, அவரது பிறந்தநாள், நினைவுநாளைக் கொண்டாடுவதைப் போன்றதே இவ்விழாவும் என்றும் விமர்சிக்கிப்படுகிறது. இந்த நினைவுநாள் கொண்டாடத்தின்போது அசம்பாவிதம் எதுவும் நிகழ்ந்து விடாமலிருக்க தமிழக காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]