இப்ராகிம் முஸ்தக் அப்துல் ரசாக் நதிம் மேமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இப்ராகிம் முஸ்தக் அப்துல் ரசாக் நதிம் மேமன்
பிறப்பு24 நவம்பர் 1960 (1960-11-24) (அகவை 58)
மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா
தொழில்தீவிரவாதி மற்றும் போதை மருந்து & ஆயுத கடத்தல் குழு தலைவன்
துணைவர்ஷாபனம்
பிள்ளைகள்3

இப்ராகிம் முஸ்தக் அப்துல் ரசாக் நதிம் மேமன் அல்லது டைகர் மேமன், (Ibrahim Mushtaq Abdul Razak Nadim Memon), (பிறப்பு: 24 நவம்பர் 1960) 1993 மும்பை வெடி குண்டு வழக்கில் இந்திய அரசின் சிபிஐ மற்றும் இண்டர் போலாலும் தேடப்படும் குற்றவாளி. தாவூத் இப்ராகிமின் "டி-கம்பெனி" அமைப்பை சேர்ந்த போதை மருந்து, ஆயுதக் கடத்தல் குழுவைச் சேர்ந்தவர் என குற்றச்சாட்டுள்ளது.[1] இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். யாக்கூபு மேமனின் உடன் பிறந்தவர்.

1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில்[தொகு]

12 செப்டம்பர் 2006இல் தடா (TADA) சிறப்பு நீதிமன்றம், 1993 மும்பை வெடி குண்டு வழக்கில், தாவூத் இப்ராகிமுடன் முக்கிய குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட, டைகர் மேமன் தற்போது தாவூத் இப்ராகிமுடன் பாகிஸ்தானில் இருப்பதாக இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.[2]

டைகர் மேமனின் உடன்பிறப்பு யாக்கூபு மேமன் மும்பை வெடி குண்டு வழக்கில் தூக்கிலிடப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]