உள்ளடக்கத்துக்குச் செல்

இப்படிக்கு காதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்படிக்கு காதல்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்பரத் மோகன்
தயாரிப்புசபரீஷ் குமார்
இசைஅரோள் கரோலி
நடிப்பு
பரத்
  • ஜனனி
  • சோனாக்சி சிங் இராவத்
ஒளிப்பதிவுபல்லு
படத்தொகுப்புபிரசன்னா ஜி. கே.
கலையகம்மேரகி எண்டர்டெயின்மெண்ட்
விநியோகம்ஆகா
வெளியீடு9 பெப்ரவரி 2024 (2024-02-09)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படிக்கு காதல் (Ippadiku Kadhal) என்பது 2024 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். இஃக்லூ புகழ் பரத் மோகன் இயக்கத்திலும் சபரீசு குமார் தயாரிப்பிலும் வெளிவந்த இப்படத்தில்.[1] பரத், சனனி ஐயர், சோனாக்சி சிங் இராவத் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அரோள் கரோலி இசையமைத்திருந்தார். பல்லு ஒளிப்பதிவையும் பிரசன்னா ஜி. கே. படத்தொகுப்பும் மேற்கொண்டனர்.[2] இப்படம் 2024 பெப்பிரவரி 9 அன்று கலவையான நேர்மறையான விமர்சனங்களுடன் ஆகாவில் நேரடியாக வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

[தொகு]

10 ஆண்டு உறவுக்குப் பின்னர், சிவாவின் மனைவி இரம்யா இவர்களின் திருமண நாளன்றே ஒரு மகிழுந்து விபத்தில் இறந்துவிடுகிறார். மேலும் சிவா நினைவற்ற நிலைக்கு மாறுகிறார். அவர் அஞ்சனாவுடன் ஒரு புதிய உறவைத் தொடங்குகிறார்.[3] இரம்யாவுடனான கடந்தகால உறவு பற்றி அஞ்சனா அறிந்த பிறகு, மோதல் ஏற்படுகிறது.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இஃக்லூ படத்திற்குப் பின்னர் இரண்டாவது தடவையாக பரத் மோகனுடன் இணைந்து அரோள் கரோலி இசையமைத்தார்.

இப்படிக்கு காதல்
ஒலிச்சுவடு
வெளியீடு2024
இசைப் பாணிதிரைப்படப் பாடல்கள்
நீளம்9:48
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்டிப்ஸ் தமிழ்
அரோள் கரோலி காலவரிசை
கலகத் தலைவன்
(2022)
இப்படிக்கு காதல்
(2024)
ரணம் அறம் தவறேல்
(2024)

அனைத்துப் பாடல்களையும் சௌந்தரராஜன் எழுதியுள்ளார்.

தமிழ்
வ. எண். பாடல் பாடகர் (ssh) நீளம்.
1. "மதுரமாகுதே" பிரதீப் குமார் 3:47
2. "கண்ணோடு நீங்காமல்" அக்சய் ஸ்ரீதர் 2:56
3. "தீராத கதை சொல்லவா" மது ஐயர் 3:05
மொத்த நீளம்ஃ 9:48

வரவேற்பு

[தொகு]

சினிமா எக்ஸ்பிரஸின் விமர்சகர் ஒருவர், "கதையின் முடிவில் மட்டுமே கதை வேகத்தை அடைந்து கதாபாத்திரங்களின் துயரங்களைத் தெரிவிக்கின்றன. அப்போதுதான் அவர்களை உண்மையிலேயே என்ன தொந்தரவு செய்கிறது என்பது குறித்து நமக்குத் தெளிவு கிடைக்கும். இயக்க நேரம் முழுவதும் தயாரிப்பாளர்களுக்கு இந்த தெளிவு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்". என்று எழுதினார்.[4] ஆனந்த விகடனிலிருந்து ஒர் விமர்சகர், "மந்தமான திரைக்கதை, எளிமையான தயாரிப்பு, செயற்கையான நடிப்பு ஆகியவை இக்கதையின் காதலில் விழுவதை சாத்தியமற்றதாக ஆக்குகின்றன." என்று எழுதினார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. M., Narayani (7 பெப்பிரவரி 2024). "Bharath-Janani team up for 'Ippadiku Kadhal'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 8 February 2024. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்பிரவரி 2014.
  2. "Bharath's 'Ippadikku Kadhal' Set For Direct OTT Release on …?". Binged. 7 பெப்பிரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்பிரவரி 2014.
  3. "Ippadiku Kadhal trailer - Bharath torn between two love interests in this romance drama | Watch here". OTTplay. 6 பெப்பிரவரி 2024. Archived from the original on 13 பெப்பிரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்பிரவரி 2014.
  4. M., Narayani (10 பெப்பிரவரி 2024). "Ippadiku Kadhal Movie Review: A lackadaisical story on finding love after grief". Cinema Express. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்பிரவரி 2014.
  5. "இப்படிக்கு காதல் விமர்சனம்: காதலை இழந்தவர்கள் மீண்டும் காதலைக் கண்டடையும் கதை; காதலிக்க வைக்கிறதா?". ஆனந்த விகடன். 12 February 2023. Archived from the original on 13 பெப்பிரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்படிக்கு_காதல்&oldid=4104359" இலிருந்து மீள்விக்கப்பட்டது