இப்னாப்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்னாப்சு
இப்னாப்சு முராய்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
அலோபிபார்மிசு
குடும்பம்:
இப்னாபபிடே
பேரினம்:
இப்னாப்சு

குந்தர், 1878
வேறு பெயர்கள்

இப்னாப்சு பெளலர் 1943
லிக்னோகுலசு முராரே 1877

இப்னாப்சு (Ipnops) என்பது ஆழ்கடல் முக்காலி மீன்கள் குடும்பமான இப்னோபிடே குடும்பத்தில் உள்ள ஆழ்கடல் மீன் பேரினமாகும். இந்தப் பேரினத்தில் நன்கு அறியப்பட்ட முக்காலி மீன் பேத்தியாப்டெரோசிசு கிராலேடர் ஆகும். இப்னாப்சு சிறிய, மெல்லிய மீன்கள் ஆகும். இவை ஆழ்கடல் பகுதி மற்றும் ஆழ்கடல் மண்டலங்களில் கடல் தளத்திற்கு அருகில் வாழ்கின்றன. இந்த பேரின மீன்கள் அசாதாரண கண்களுக்காகக் குறிப்பிடத்தக்கது.[1]

சிற்றினங்கள்[தொகு]

இந்தப் பேரினத்தில் தற்போது மூன்று அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[2]

  • இப்னாப்சு அகாசிசி கர்மன், 1899 (கிரிட்ஐ மீன்)
  • இப்னாப்சு மீடி ஜேஜி நீல்சன், 1966
  • இப்னாப்சு முர்ராய் குந்தர், 1878

பரவல்[தொகு]

இப்னாப்சு சிற்றின மீன்கள் 1392 முதல் 3475 மீ வரையிலா கடல் ஆழத்தில் பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானவை இ. முர்ராய் மற்றும் இ. அகாசிசி ஆகும். இ. முர்ராய் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் காணப்படுகிறது. இ. அகாசிசி இந்தோ-பசிபிக் பகுதியில் காணப்படுகிறது. இ. மீடி இந்தோ-பசிபிக் பகுதியில் 3310-4970 மீ ஆழத்தில் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bray, D.J. 2020, Ipnops in Fishes of Australia, accessed 19 Jun 2023, https://fishesofaustralia.net.au/home/genus/721
  2. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Ipnops in FishBase. April 2012 version.

நூல் பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்னாப்சு&oldid=3738823" இலிருந்து மீள்விக்கப்பட்டது