இனத்தொகை

உயிரியலில், ஒரு இனத்தொகை (Population) என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் வாழும், மற்றும் தமக்குள் பாலியல் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்ட, ஒரே இனத்தைச் சார்ந்த ஒரு குழு அல்லது உயிரினங்களின் மொத்த எண்ணிக்கை ஆகும்.[1][2] இனத்தொகையானது ஒரு நகரம், அல்லது பிராந்தியம், அல்லது நாடு அல்லது உலகில் அல்லது நீர்நிலையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தின் மொத்த எண்ணிக்கையைக் குறிக்கிறது.
சமூகவியலில், மனிதர்களின் இனத்தொகையைை மக்கள் தொகை என்பர். தொகையியல் என்பது ஒரு சமூக அறிவியலாகும். இது இனத்தொகை பற்றிய புள்ளிவிபர ஆய்வு முடிவுகளைத் தருகிறது. இனத்தொகை பொதுவாக கணக்கெடுப்பு எனப்படும் ஒரு செயல்முறையால் தீர்மானிக்கப்படுகிறது. கணக்கீட்டில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, தொகுத்துப் பின்னர் வெளியிடப்படும்.
நீர்நிலைகளில் உள்ள உயிரினங்களின் இனத்தொகை மதிப்பீடானது சில மாதிரி கணக்கெடுப்புகளைப் பெற்றுக் கொண்டபின் அந்தத் தரவுகளை வைத்து வரையறுக்கப்பட்ட மாதிரியமைத்தல் முறை (modelling) ஒன்றைப் பாவித்துச் செய்யப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Population". Biology Online . 5 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Definition of population (biology)". Oxford Dictionaries . Oxford University Press . 4 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
a community of animals, plants, or humans among whose members interbreeding occurs
Invalid|url-status=
(உதவி); Check date values in:|access-date=, |archive-date=
(உதவி)