மாதிரி (புள்ளியியல்)
Appearance
புள்ளியியலிலும், கணித ஆய்வு முறைகளிலும், மாதிரி (sample) அல்லது மாதிரித் தரவு (data sample) என்பது, வரையறுக்கப்பட்ட முறை ஒன்றின் மூலம், புள்ளியியல் தொகுதி ஒன்றிலிருந்து சேகரிக்கப்பட்ட அல்லது தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி தரவுகளைக் குறிக்கும்.[1]
பொதுவாக, புள்ளியியல் தொகுதி (population) என்பது, அத்தொகுதியில் கணக்கெடுப்பு நடத்தி எல்லாப் பெறுமானங்களையும் பெறுவது நடைமுறைச் சாத்தியம் இல்லாதது அல்லது முடியாது என்னும் அளவுக்கு மிகவும் பெரிதாக இருக்கும். மாதிரி என்பது முழுத் தொகுதியின் கையாளக் கூடிய அளவிலான ஒரு உட்தொகுதி. புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தி மாதிரிகளிலிருந்து பெறப்படும் தரவுகளிலிருந்து முழுத் தொகுதி தொடர்பிலான விடயங்களை உய்த்துணர முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Peck, Roxy; Chris Olsen; Jay L. Devore (2008). Introduction to Statistics and Data Analysis (3 ed.). Cengage Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-495-55783-8. பார்க்கப்பட்ட நாள் 2009-08-04.