இந்திய பொது சுகாதார நிறுவனம், காந்திநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்திநகர் இந்திய பொது சுகாதார நிறுவனம்
Indian Institute of Public Health, Gandhinagar
வகைதனியார்
உருவாக்கம்2015
தலைவர்சுதிர் மங்காத்து[1]
பணிப்பாளர்திலீப் மாவலங்கார்[2]
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்iiphg.edu.in

இந்திய பொது சுகாதார நிறுவனம், காந்திநகர் (Indian Institute of Public Health, Gandhinagar) இந்தியாவின் குசராத்து மாநிலம் காந்திநகரில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகமாகும்.[3] காந்திநகர் இந்திய பொது சுகாதார நிறுவனச் சட்டம் 2015[4] இன் அடிப்படையில் இந்த பல்கலைக்கழகம் 2015 ஆம் ஆண்டு இந்திய பொது சுகாதார அறக்கட்டளையால்[5] நிறுவப்பட்டது. இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள ஐந்து இந்தியப் பொது சுகாதார நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். பல்கலைக்கழகத் தகுதி வழங்கப்பட்ட முதலாவது இந்தியப் பொது சுகாதார நிறுவனமும் காந்திநகர் இந்தியப் பொது சுகாதார நிறுவனமேயாகும்.[1] இப்பல்கலைக்கழகம் முழுமையாக பொது சுகாதாரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

வரலாறு[தொகு]

குசராத்து அரசாங்கமும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளையும் 2007 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 2008 ஆம் ஆண்டில் குசராத்து மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 2008 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் ஒரு தற்காலிக இடத்தில் நிறுவனம் செயல்படத் தொடங்கியது. 2015 ஆம் ஆண்டு காந்திநகரில் நிரந்தர வளாகம் திறக்கப்பட்டு நிறுவனத்திற்கு பல்கலைக்கழக தகுதியும் வழங்கப்பட்டது.[1]

படிப்புகள்[தொகு]

காந்திநகர் இந்திய பொது சுகாதார நிறுவனத்தில் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்தில் இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பும் கற்பிக்கப்படுகின்றன. இவை தவிர ஓராண்டு பட்டயப் படிப்பு ஒன்றும் பல குறுகிய கால தொலைநிலைக் கல்வித்திட்ட படிப்புகளும் கற்பிக்கப்பட்டு வருகின்றன.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Home" (in en-gb). Indian Institute of Public Health - Gandhinagar இம் மூலத்தில் இருந்து 17 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170917213924/http://iiphg.edu.in/v2/index.php. 
  2. "Faculty and Staff" (in en-gb). Indian Institute of Public Health - Gandhinagar இம் மூலத்தில் இருந்து 17 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170917213744/http://iiphg.edu.in/v2/index.php/about-us-2/faculty-and-staff. 
  3. "State -wise List of Private Universities as on 29.06.2017". University Grants Commission. 29 June 2017. http://www.ugc.ac.in/oldpdf/Private%20University/Consolidated%20List%20Private%20Universities%20as%20on%2029.06.2017.pdf. 
  4. "The Indian Institute of Public Health Gandhinagar Act, 2015". Gujarat Gazette (Government of Gujarat). 11 March 2015 இம் மூலத்தில் இருந்து 17 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170917213950/http://iiphg.edu.in/v2/images/pdfs/IIPHG_University_GOG_Gazette.pdf. 
  5. "Academic Programmes- The IIPH Advantage" (in en-gb). Public Health Foundation of India. https://www.phfi.org/index.php?option=com_content&view=article&id=86&Itemid=161. 
  6. "On Campus Programs" (in en-gb). Indian Institute of Public Health - Gandhinagar இம் மூலத்தில் இருந்து 18 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170918020814/http://iiphg.edu.in/v2/index.php/programs/acedemic-programs.