இந்திய அரிசி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய அரிசி மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: பெலோனிபார்மிசு
குடும்பம்: அரிசிமீன்
பேரினம்: ஓரைசியாசு
இனம்: ஓ. டான்செனா
இருசொற் பெயரீடு
ஓரைசியாசு டான்செனா
ஹாமில்டன், 1822
வேறு பெயர்கள் [2]
  • சிப்பிரினசு டான்செனா ஹாமில்டன், 1822
  • அப்லோசெலசு மெக்செலாந்தி பிளீக்கர், 1854
  • பான்சாக்சு சையனோப்தலாமா பிளைத், 1858

ஓரைசியாசு டான்செனா (Oryzias dancena) அல்லது இந்திய அரிசி மீன் என்பது இந்தியா, வங்காளதேசம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு நன்னீர் - உவர் மீன் சிற்றினமாகும். இவற்றின் அதிகபட்ச நீளம் 3.1 சென்டிமீட்டர்கள் (1.2 அங்) ஆகும். இவை பொதுவாகக் கடற்கரைக்கு அருகிலுள்ள உப்பு நிறைந்த வாழ்விடங்களில் காணப்படுகின்றன. ஆனால் இந்திய அரிசி மீன் நன்னீரிலும் வாழ்கிறது.[2][1] இந்த மீனின் வாழ்விற்கு அச்சுறுத்தல் எதுவும் கருதப்படவில்லை.[1] 1822ஆம் ஆண்டில் பிரான்சிசு புக்கனன்-ஆமில்டன் என்பவரால் சைப்ரினசு டான்செனா என இந்த சிற்றினம் விவரிக்கப்பட்டது. இது கல்கத்தாவிற்குக் கீழே உள்ள கழிமுகம் பகுதியில் காணப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Dahanukar, N.; de Alwis Goonatilake, S.; Fernado, M.; Kotagama, O. (2019). "Oryzias dancena". IUCN Red List of Threatened Species 2019: e.T172326A60603626. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T172326A60603626.en. https://www.iucnredlist.org/species/172326/60603626. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 வார்ப்புரு:Fishbase
  3. வார்ப்புரு:Cof record
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_அரிசி_மீன்&oldid=3579178" இலிருந்து மீள்விக்கப்பட்டது