இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 3, இந்தியாவில் புதிய மாநிலங்கள் அல்லது ஒன்றியப் பகுதிகளை உருவாக்குதல் மற்றும் தற்போதுள்ள மாநிலங்களின் பகுதிகளைப் பிரித்தல், எல்லைகள் அல்லது பெயர்களை மாற்றுவது குறித்து இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை விளக்குகிறது. [1][2]

இந்தியாவில் புதிய மாநிலத்தை அல்லது ஒன்றியப் பகுதியை உருவாக்குவதற்கு இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இந்திய நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதன் மூலம் (அ) எந்தவொரு மாநிலத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை பிரிப்பதன் மூலமாகவோ அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது மாநிலங்களின் பகுதிகளை ஒன்றிணைப்பதன் மூலமாகவோ அல்லது எந்தவொரு பிரதேசத்தையும் எந்த மாநிலத்தின் ஒரு பகுதிக்கு ஒன்றிணைப்பதன் மூலமாகவோ புதிய மாநிலத்தை உருவாக்க்குதல், (ஆ) எந்த ஒரு மாநிலத்தின் பரப்பையும் அதிகரித்தல், (இ) எந்த ஒரு மாநிலத்தின் பரப்பையும் குறைத்தல் அல்லது (ஈ) எந்த ஒரு மாநிலத்தின் பெயரையும் மாற்ற முடியும்.

மாநிலத்தைப் பிரிப்பதற்கான நடைமுறைகள்[தொகு]

  • இந்திய நாடாளுமன்றம் ஒரு மாநிலத்தைப் பிரித்து புதிய மாநிலம் அல்லது ஒன்றியப் பகுதியை உருவாக்குவதற்கு முன்னர் அதற்கான சட்ட முன்வரைவுவை அமைச்சரவைக் குழு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அதற்கான ஒப்புதல் பெறவேண்டும்.
  • மாநிலத்தை பிரிப்பதற்கான சட்டமன்ற முன் வரைவு குறித்து கருத்து கேட்பதற்கு உரிய மாநிலச் சட்டப் பேரவைக்கு குடியரசுத் தலைவர் அனுப்பி வைப்பர்.
  • உரிய மாநில சட்டப் பேரவை மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்மறையான கருத்துக்கள் கூறினாலும், உரிய காலத்திற்கு பின்னர் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்திற்கு மாநிலத்தைப் பிரிக்கும் பரிந்துரையை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவார்.
  • பின்னர் மாநிலத்தைப் பிரிக்கத் தேவையான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றும்.

வரலாறு[தொகு]

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 3-கீழ் முதன் முதலாக இயற்றப்பட்ட 1956-ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் படி சென்னை மாகாணத்தின் பகுதிகளைப் பிரித்து 1957-இல் ஆந்திரப் பிரதேசம், கேரளம், கர்நாடகா போன்ற மொழிவழி மாநிலங்கள் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்றம் 2014-ஆம் ஆண்டில் கொண்டு வந்த ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ்[3] 2 சூன் 2014 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் மேற்குப் பிரதேசத்தைக் கொண்டு தெலங்காணா மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது.[4].இறுதியாக இந்த அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 3-இன் கீழ் நாடாளுமன்றம் இயற்றிய 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Article 3 Constitution of India: Formation of new States and alteration of areas, boundaries or names of existing States.
  2. Article 3 in The Constitution Of India 1949
  3. Andhra Pradesh Reorganisation Act, 2014
  4. "Telangana Becomes India's 29th State; KCR to be Sworn In as First Chief Minister". NDTV. 1 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]