இந்தியத் துறைமுகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜவகர்லால் நேரு பொறுப்பாட்சித் துறைமுகம் நவி மும்பை

இந்திய நாடு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள ஒரு நாடு. இது உலகின் பெரிய மூவலந்தீவுகளுள் ஒன்று. இந்தியக் கடற்கரையின் நீளம் 7600 கிலோமீட்டர்கள். இங்கு 13 பெரிய துறைமுகங்களும் 187 சிறிய, நடுத்தர துறைமுகங்களும் உள்ளன. சூன் 2010-இல் போர்ட் பிளேர் நாட்டின் பெரிய துறைமுங்களில் 13-ஆவது துறைமுகமாகச் சேர்க்கப்பட்டது.

2007-ஆம் கணக்கின் படி ஏறத்தாழ 74 சதவீத சரக்கினை பெரிய துறைமுகங்களே கையாண்டன. மேலும் 70% பெட்டகப் போக்குவரத்தினை மும்பைத் துறைமுகமும் சவகர்லால் நேரு துறைமுகக் கழகமுமே கையாண்டன.

பெரிய துறைமுகங்கள்[தொகு]