உள்ளடக்கத்துக்குச் செல்

இடைவெட்டுச் சந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரே தளத்தில், நிலமட்டத்தில், சாலைகள் ஒன்றையொன்று சந்திக்கும் அல்லது இடைவெட்டும் இடம் இடைவெட்டுச் சந்தி (intersection) எனப்படும். மூன்று சாலைகள் ஓரிடத்தில் சந்திக்கும்போது அது முச்சந்தி எனவும் நான்கு சாலைகளின் சந்திப்பு நாற்சந்தி எனவும் அழைக்கப்படுகின்றது. முச்சந்தி என்பது தொடர்ந்து செல்லும் சாலையொன்றை இன்னொரு சாலை சந்திக்கும்போது ஏற்படும் "T" - சந்திப்பாகவோ அல்லது, மூன்று வெவ்வேறு சாலைகள் சந்திக்கும் "Y" - சந்திப்பாகவோ இருக்கலாம். அதுபோலவே நாற்சந்தியும் இரண்டு தொடர்ந்து செல்லும் சாலைகள் இடைவெட்டும் இடமாகவோ அல்லது நான்கு வெவ்வேறு சாலைகள் சந்திக்கும் இடமாகவோ இருக்கக்கூடும். நான்குக்கு மேற்பட்ட சாலைகளும் ஒரே சந்திப்பில் இடம் பெறுவதுண்டு.

இடைவெட்டுச்சந்தி

வகைகள்[தொகு]

இடைவெட்டுச் சந்திகள், கட்டுப்பாடுகளற்ற சந்திகளாக அல்லது கட்டுப்பாட்டு ஒழுங்குகளுடன் கூடிய சந்திகளாக இருக்கின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைவெட்டுச்_சந்தி&oldid=3394729" இலிருந்து மீள்விக்கப்பட்டது