உள்ளடக்கத்துக்குச் செல்

இடைக்காடு (யாழ்ப்பாணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இடைக்காடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இடைக்காடு

இடைக்காடு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°47′36″N 80°05′55″E / 9.793326°N 80.09850°E / 9.793326; 80.09850
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


இடைக்காடு இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்கு திசையில் வடமாராச்சிப் பகுதியின் ஒரு கிராமம் ஆகும். இது அச்சுவேலி பிரதேசப்பை பிரிவில் உள்ளது. இடைக்காட்டின் வடக்கு எல்லை பக்குநீரினை கடலைக் கொண்டுள்ளது. கிழக்கு எல்லையில் தம்பலை, வல்வை தொன்டைகமானாறு ஆகியவையும், மேற்கு எல்லையில் பலாலி, தெற்கு எல்லையில் அச்சுவேலி, பத்தமேனி, கதிரிப்பாய் ஆகிய கிராமங்களும் உள்ளன.

இடைக்காட்டு பிரதேசத்தில் பிரபலமான பல கோயில்கள் உள்ளன.

இடைக்காடு இடிகுண்டு[தொகு]

பல ஆண்டுகள் பழமையான இடிகுண்டுக் கிணறு இடைக்காட்டுப் பிரதேசத்தில் உள்ளது. முன்னர் இடி ஒன்று விழுந்ததாகவும் இதனால் வற்றாத இக்கிணறு உருவானதாகவும் அறியக்கிடக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை அடி விட்டமும் மூன்று அடி நீளமும் உடையதாக உள்ளது. மேலும் சிறப்பாக ஒன்றரை அடி ஆழத்திலேயே நீர் கிடைக்கிறது. சவர் நிலப்பரப்பில் இருந்தாலும் இக்குண்டில் நல்ல நீர் கிடைக்கிறது. ஒரு ஆளை மூடக்கூடியளவு நீர் மட்டமும் உள்ளது. போதுவாக மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு நீர் தாகத்தை தீர்ப்பதற்கு பாவிக்கிறார்கள். பாறைத் தொடராகவுள்ள இப்பிரதேசத்தில் பாறையில் உள்ள பள்ளம் நீர் தாங்கு தொட்டியாக பாவிக்கப்படுகிறது. மேலும் இந்த கிணறு மனித பாதம் போல அமைந்துள்ளதாகும். அதுவும் இடது பாதம் போல அமைந்துள்ளது. இக்கிணற்றிற்கு சற்று தூரத்தில் வலது கால் போல அமைந்துள்ள கிணறும் உள்ளது. இது தூர்வடைந்துள்ளது. இதே போன்ற வற்றாக் கிணறுகள் நவாலி இடிகுண்டு நிலாவரை வற்றாக்கிணறு போன்றவையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைக்காடு_(யாழ்ப்பாணம்)&oldid=2651953" இலிருந்து மீள்விக்கப்பட்டது