இடன்யாங் குன்சான் சிறப்புப் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இடன்யாங் குன்சான் சிறப்புப் பாலம்
போக்குவரத்து தண்டவாளம்
இடம் சீனாவின் ஜியாங்சு மாகாணம்
மொத்த நீளம் 164.8 கிலோமீட்டர்கள் (102.4 mi)
கட்டுமானம் தொடங்கிய தேதி 2006[1]
கட்டுமானம் முடிந்த தேதி 2010
திறப்பு நாள் சூன் 30, 2011
அமைவு 31°35′52″N 120°27′25″E / 31.597837°N 120.456848°E / 31.597837; 120.456848

இடன்யாங் குன்சான் சிறப்புப் பாலம் (Danyang–Kunshan Grand Bridge) என்பது உலகிலுள்ள நீண்ட பாலம்.[2] இது 164.8 கிலோமீட்டர்கள் (102.4 mi) நீளமுடைய ஏதண்டத்தை பெய்ஜிங்-சாங்காய் அதிவேக தண்டவாளத்தில் கொண்டுள்ளது.

பாலம்[தொகு]

இப்பாலம் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் சாங்காய் மற்றும் நாஞ்சிங் ஆகியவற்றுக்கிடையிலான தண்டவாள வழியில் அமைந்துள்ளது.

இது 2010 இல் கட்டி முடிக்கப்பட்டு 2011 இல் திறந்து வைக்கப்பட்டது. 10,000 பேர் வேலைக்கமர்த்தப்பட்டு, நான்கு வருடங்களில் கட்டப்பட்ட இப்பாலத்தின் செலவு கிட்டத்தட்ட $8.5 பில்லியன் ஆகும்.[1] இடன்யாங் குன்சான் சிறப்புப் பாலம் உலகிலுள்ள நீண்ட பாலம் என்ற கின்னஸ் உலக சாதனையை சகல வகையிலும் சூன் 2011 இன்படி பெற்றுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]