இசைநுணுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இசைநுணுக்கம் (Isai Nunukkam) என்பது கபாடபுரம் என்னும் பாண்டியர்களின் இடைச்சங்கத் தலைநகரில் அரங்கேறிய ஒரு இசை இலக்கண நூலாகும்.

அடியார்க்கு நல்லார் குறிப்பு[தொகு]

தெய்வப் பாண்டியன் மகன் சாரகுமாரன் இசையறிதல் பொருட்டு அகத்தியரின் 12 மாணாக்கர்களில் ஒருவனான சிகண்டிசெய்த நூல் இசைநுணுக்கம். மேலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் கூத்தநூல்கள்,[1]

  1. கூத்தநூல்
  2. இந்திரகாளியம்
  3. பஞ்சமரபு
  4. பரதசேனாபதியம்
  5. நாடகத்தமிழ்நூல்

புதினம்[தொகு]

நா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் ஒன்றான கபாடபுரம் என்னும் புதினத்தில் இசைநுணுக்கம் பற்றி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வெண்டேர்ச் செழியன் என்னும் பாண்டியர் மன்னனின் ஆட்சியில் அவரது பேரனான சாரகுண பாண்டியன் மற்றும் சாரகுணனின் காதலியான கண்ணுக்கினியாள் ஆகியவர்களின் இசை ஞானம் பொருட்டு சிகண்டியாசிரியர் என்னும் புலவரால் அவர்களின் இசை ஆராயப்பட்டு 59 புலவர்கள் முன்னும் இடைச்சங்கம் இருந்த கபாடபுர அரண்மனையில் அரங்கேறுவது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 197
  2. http://www.tamilvu.org/library/nationalized/pdf/48-NA.PARTHASARATHI/KAPADAPURAM.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசைநுணுக்கம்&oldid=2575250" இருந்து மீள்விக்கப்பட்டது