வெண்டேர்ச் செழியன்
Appearance
வெண்டேர்ச் செழியன் என்பவன் இறையனார் அகப்பொருள் கூறும் இடைச்சங்கம் நிறுவிய முதலாம் பாண்டியர் மன்னன் ஆவான். இவன் கபாடபுரம் என்னும் நகரை தலைநகராகக் கொண்டு ஆண்டவன்.
இடைச்சங்கம்
[தொகு]குறிப்பு | இடைச்சங்கம் |
---|---|
சங்கம் இருந்த இடம் | கபாடபுரம் |
சங்கம் நிலவிய ஆண்டுகள் | 3700 (37 பெருக்கல் 100) |
சங்கத்தில் இருந்த புலவர்கள் | அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை இத் தொடக்கத்தார் |
புலவர்களின் எண்ணிக்கை | 3700 |
பாடிய புலவர்களின் எண்ணிக்கை | 59 |
பாடப்பட்ட நூல்கள் | பெருங்கலி, குருகு, வெண்டாழி, வியாழமாலை, அகவல், பூதபுராணம்,மாபுராணம் ஆகிய இலக்கியங்கள் தோன்றின. |
சங்கம் பேணிய அரசர்கள் | வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திரு மாறன் வரை |
சங்கம் பேணிய அரசர்களின் எண்ணிக்கை | 59 |
கவியரங்கு ஏறிய புலவர் எண்ணிக்கை | 5 |
அவர்கள் பயன்படுத்திய இலக்கண நூல் | அகத்தியம், தொல்காப்பியம், இசைநுணுக்கம், |
புதினம்
[தொகு]நா. பார்த்தசாரதி என்பவரால் எழுதப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் ஒன்றான கபாடபுரம் என்னும் நூலில் இவரின் கதாப்பாத்திரம் வருகிறது. அதன்படி இவர் வெண்முத்துக்களை பதித்த மூவாயிரம் தேர்களை கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். அதனால் இவர் பெயர் வெண்தேர்ச் செழியன் என்றானது.[1]