தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் என்பது தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட சான்றோர்களின் நூல்கள் பொதுவுரிமை ஆக்கப்பட்டு, அவர்தம் மரபுரிமையருக்கு தமிழக அரசு பரிவுத்தொகை வழங்குவதைக் குறிக்கும்.

நோக்கம்[தொகு]

தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்ச் சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு ஆக்கப்பட்ட நூல்கள் தடையின்றி தமிழ் மக்கள் அனைவரையும் சென்று அடைதல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் அவை நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன.

தகுதி[தொகு]

அச்சான்றோர்கள் உருவாக்கிய (1) நூல்களின் எண்ணிக்கை, (2) அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், (3) அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் பரிவுத்தொகை வழங்குவர். (4) காப்புரிமைச் சட்டப்படி எழுத்தாளர் மறைந்து 60 ஆண்டுகள் கழித்துதான் நாட்டுடைமை யாக்கப்பட வேண்டும்.[சான்று தேவை]

பரிவுத்தொகை வழங்கும் முறை[தொகு]

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களுக்கான பரிவுத்தொகையைப் பெற அத்தமிழறிஞர்தம் மரபுரிமையாளர்கள் தம் மரபுரிமைச் சான்றிதழை வழங்க வேண்டும்.

நாட்டுடைமையாக்கிய நூல்களை எழுதிய தமிழறிஞர்கள்[தொகு]

வ.எண் ஆண்டு படைப்பாளரின் பெயர் படைப்பாளரின் உருவம்" பரிவுத்தொகை குறிப்பு
01 1963 சுப்பிரமணிய பாரதி
Subramanya Bharathi.jpg
1949 இல் அரசால் உரிமைகள் வாங்கப்பட்டன.
1963 இல் நாட்டுடைமையாக்கப்பட்டன.
02 1984
2006
ம. பொ. சிவஞானம்
MP Sivagnanam 2006 stamp of India.jpg
விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலுக்கு மட்டும் ஒரு இலட்சம்
மற்ற அனைத்துப் படைப்புகளுக்கும் 20 இலட்சம்
1984இல் விடுதலைப் போரில் தமிழகம் எனும் நூலும்
2006 இல் பிற அனைத்துப் படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டன
03 1990 பாரதிதாசன்
Bharathidasan (cropped).jpg
10 இலட்சம்
04 1995 அண்ணாத்துரை
Peraringnar Anna.jpg
75 இலட்சம் இவர் எழுதிய ஆரிய மாயை என்னும் நூல் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.
05 1998 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Pattucottai.jpg
10 லட்சம்
06 1996 தேவநேயப் பாவாணர்
Devaneya Pavanar 2006 stamp of India.jpg
20 லட்சம்
07 1997 மறைமலையடிகள்
Maraimalai Adigal 2007 stamp of India.jpg
30 லட்சம்
08 1998 திரு. வி. கலியாணசுந்தரனார்
V Kalyanasundaram 2005 stamp of India.jpg
20 லட்சம்
09 1998 கல்கி
Kalki Krishnamurthy 1999 stamp of India.jpg
20 லட்சம்
10 1998 தேசிக விநாயகம் பிள்ளை
Desigavinayagam Pillai.jpg
5 லட்சம்
11 1998 ப. ஜீவானந்தம்
P Jeevanandham 2010 stamp of India.jpg
5 லட்சம்
12 1998 வெ. இராமலிங்கம் பிள்ளை
Venkatarama Ramalingam Pillai 1989 stamp of India.jpg
5 லட்சம்
13 1998 வ.உ. சிதம்பரனார்
V. O. Chidambaram Pillai.jpg
5 லட்சம்
14 1998 ஏ. எஸ். கே. 5 லட்சம் இவர் திருமணம் ஆகாதவர்.
எனவே மரபுரிமையர் ஒருவரும் இல்லாததால்
பரிவுத் தொகை வழங்கப்படவில்லை
15 1998 வ. ராமசாமி 5 லட்சம் இவருக்கு மரபுரிமையர் ஒருவரும் இல்லாததால்
பரிவுத்தொகை வழங்கப்படவில்லை
16 1998 சோமசுந்தர பாரதியார் 5 லட்சம்
17 1998 கா. மு. ஷெரீப் 5 லட்சம்
18 1998 பரலி சு. நெல்லையப்பர் 5 லட்சம்
19 1998 வ. வே. சுப்பிரமணியம் ( வ.வே.சு. ஐயர் ) 5 லட்சம்
20 1998 சா. கணேசன் 5 லட்சம்
21 1998 ச. து. சு. யோகி 5 லட்சம்
22 2000 வெ. சாமிநாத சர்மா 5 லட்சம்
23 2000 முடியரசன் 10 லட்சம்
24 2000 மயிலை சீனி வேங்கடசாமி 10- லட்சம்
25 2000 சாமி சிதம்பரனார் 10 லட்சம்
26 2001 கா. அப்பாத்துரை 10 லட்சம்
27 2002 புதுமைப்பித்தன் 5 லட்சம்
28 2002 கு.ப.சேது அம்மாள் 5 லட்சம்
29 2004 ந. மு. வேங்கடசாமி நாட்டார் 5 லட்சம்
30 2004 க. நா. சுப்ரமண்யம் 5 லட்சம்
31 2004 ந. பிச்சமூர்த்தி லட்சம்
32 2006 புலவர் குழந்தை 10 லட்சம் இவர் இயற்றிய இராவண காவியம் என்னும் நூல்
தமிழக அரசால் தடை செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.
33 2006 பரிதிமாற் கலைஞர் (திரு. வி.கோ. சூரியநாராயண சாத்திரி) 15 லட்சம்
34 2006-7 கா. சு. பிள்ளை 6 லட்சம்
37 2006-7 குலாம் காதிறு நாவலர் 6 லட்சம்
38 2006-7 தி. வை. சதாசிவ பண்டாரத்தார் 6 லட்சம்
39 2006-7 சி. இலக்குவனார் 6 லட்சம்
40 2006-7 எம். எம். தண்டபாணி தேசிகர் 6 இலட்சம்
41 2006-7 தி. ச. ரங்கநாதன் ( தி.ஜ.ர. ) 6 லட்சம்
42 2006-7 நாரண துரைக்கண்ணன் 6 லட்சம்
43 2006-7 மா. இராசமாணிக்கம் 6 லட்சம்
44 2006-7 வ. சுப. மாணிக்கம் 6 லட்சம்
45 2006-7 கா. கோவிந்தன் 6 லட்சம்
46 2006-7 வை. கோவிந்தன் 6 இலட்சம்
47 2006-7 தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் 6 லட்சம்
48 2006-7 த. நா. குமாரசாமி 6 இலட்சம்
49 2006-7 மாயூரம் வேதநாயகம் பிள்ளை 6 இலட்சம்
50 2007-8 ம. சிங்காரவேலர் 6 இலட்சம்
51 2007-8 குன்றக்குடி அடிகளார் 10 இலட்சம்
52 2007-8 கி. ஆ. பெ. விசுவநாதம் 10 இலட்சம்
53 2007-8 கி. வா. ஜகந்நாதன் 15 இலட்சம்
54 2007-8 ஔவை துரைசாமி 15 இலட்சம்
55 2007-8 அ. ச. ஞானசம்பந்தன் 15 இலட்சம்
56 2007-8 வீ. முனுசாமி 10 இலட்சம்
57 2007-8 சுரதா 10 இலட்சம்
58 2007-8 சாவி 10 இலட்சம்
59 2007-8 வ. கோ. சண்முகம் 5 இலட்சம்
60 2007-8 நா. பார்த்தசாரதி 15 இலட்சம்
61 2007-8 எசு. எசு. தென்னரசு 10 இலட்சம்
62 2007-8 சி. பி. சிற்றரசு 5 இலட்சம்
63 2007-8 ஏ. வி. பி. ஆசைத்தம்பி 5 இலட்சம் இவர் எழுதிய காந்தியார் சாந்தியடைய என்னும் நூல்
1950ஆம் ஆண்டில் தமிழக அரசால்
தடைசெய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.
64 2007-8 டி. கே. சீனிவாசன் 5 இலட்சம்
65 2007-8 இராம. அரங்கண்ணல் 5 இலட்சம்
66 2007-8 வாணிதாசன் 5 இலட்சம்
67 2007-8 கருணானந்தம் 5 இலட்சம்
68 2007-8 மருதகாசி 5 இலட்சம்
69 2007-8 சலகண்டபுரம் ப. கண்ணன் 5 இலட்சம் மரபுரிமையர்கள் சான்றாவணத்தை அளித்து,
பரிவுத்தொகையைப் பெற்றுக்கொள்ளவில்லை.
70 2008-9 ம. ப. பெரியசாமித்தூரன் 10 இலட்சம்
71 2008-9 க. வெள்ளை வாரணனார் 10 இலட்சம்
72 2008-9 க. அயோத்திதாசர் 10 இலட்சம் மரபுரிமையர்கள் சான்றாவணத்தை அளித்து,
பரிவுத்தொகையைப் பெற்றுக்கொள்ளவில்லை.
73 2008-9 ஆபிரகாம் பண்டிதர் 10 இலட்சம் மரபுரிமையர்கள் சான்றாவணத்தை அளித்து, பரிவுத்தொகையைப் பெற்றுக்கொள்ளவில்லை.
74 2008-9 சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் 10 இலட்சம்
75 2008-9 ரா. பி. சேதுப்பிள்ளை 10 இலட்சம்
76 2008-9 இரா. இராகவையங்கார் 5 இலட்சம்
77 2008-9 உடுமலை நாராயண கவி 5 இலட்சம்
78 2008-9 கு. மு. அண்ணல் தங்கோ 5 இலட்சம்
79 2008-9 அவ்வை தி. க. சண்முகம் 5 இலட்சம்
80 2008-9 விந்தன் 5 இலட்சம்
81 2008-9 இலா. ச. இராமாமிர்தம் 5 இலட்சம்
82 2008-9 வல்லிக்கண்ணன் 5 இலட்சம்
83 2008-9 நா. வானமாமலை 5 இலட்சம்
84 2008-9 புதுவை சிவம் 5 இலட்சம்
85 2008-9 அ. இராகவன் 5 இலட்சம்
86 2008-9 தொ. மு. சிதம்பர ரகுநாதன் 5 இலட்சம் இவர் எழுதிய முதலிரவு என்னும் புதினம்
1955ஆம் ஆண்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டது.
87 2008-9 சக்திதாசன் சுப்பிரமணியன் 5 இலட்சம்
88 2008-9 ந. சஞ்சீவி 5 இலட்சம்
89 2008-9 முல்லை முத்தையா 5 இலட்சம்
90 2008-9 எசு. டி. சுந்தரம் 5 இலட்சம்
91 2008-9 மீரா என்னும் மீ. ராசேந்திரன் 5 இலட்சம்
92 2008-9 ஆ. கார்மேகக் கோனார் 5 இலட்சம்
93 2008-9 முகமது நயினார் மரைக்காயர் 5 இலட்சம்
94 2008-9 சு. சமுத்திரம் 5 இலட்சம்
95 2008-9 கோவை இளஞ்சேரன் 5 இலட்சம்
96 2008-9 ந. சுப்புரெட்டியார் 5 இலட்சம்
97 2008 பெருஞ்சித்திரனார் 12 இலட்சம்
98 2009-10 அழ. வள்ளியப்பா 5 இலட்சம்
99 2009-10 மு. கதிரேசச் செட்டியார் 5 இலட்சம்
100 2009-10 பம்மல் சம்பந்தனார் 3 இலட்சம்
101 2009-10 சிதம்பரநாதன் செட்டியார் 3 இலட்சம்
102 2009-10 மு. சி. பூரணலிங்கம் பிள்ளை 3 இலட்சம்
103 2009-10 தொ.மு. பாசுகரத் தொண்டைமான் 3 இலட்சம்
104 2009-10 பாலூர் து. கண்ணப்ப முதலியார் 3 இலட்சம்
105 2009-10 ச. அகத்தியலிங்கம் 5 இலட்சம்
106 2009-10 நாரா. நாச்சியப்பன்
107 2009-10 புலியூர்க் கேசிகன் 5 இலட்சம்
108 2009-10 வை. மு. கோதைநாயகி 3 இலட்சம்
109 2009-10 சின்ன அண்ணாமலை 5 இலட்சம்
110 2009-10 என். வி. கலைமணி 3 இலட்சம்
111 2009-10 முருகு சுந்தரம் 3 இலட்சம்
112 2009-10 த. கோவேந்தன் 3 இலட்சம்
113 2009-10 அ. க. நவநீதகிருட்டிணன் 3 இலட்சம்
114 2009-10 வடுவூர் துரைசாமி அய்யங்கார் 5 இலட்சம்
115 2009-10 மு. இராகவையங்கார் 5 இலட்சம்
116 2009-10 பூவை எஸ். ஆறுமுகம் 3 இலட்சம் பரிவுத்தொகையைப் பெறுவது தொடர்பாக
மரபுரிமையர்கள் இடையே வழக்கு நிலுவையில் உள்ளது.
எனவே பரிவுத்தொகை வழங்கப்படாமல்
நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.)
117 2009-10 வையாபுரிப்பிள்ளை 5 இலட்சம் முதலில் ரூ. 3 இலட்சம் ஒப்பளிப்பு.
பின்னர் கூடுதலாக ரூ. 2 இலட்சம் ஒப்பளிப்பு
118 2009-10 இராய சொக்கலிங்கம் 5 இலட்சம் மரபுரிமையர் யாருமில்லாததால்
பரிவுத்தொகை வழங்கப்படவில்லை)
119 2009-10 இராசம் கிருட்டிணன் 3 இலட்சம் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில்
இவரது வேண்டுகோளை ஏற்று, சிறப்புத் தேர்வாகக் கருதி
அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கி, மரபுரிமையர் ஒருவருமில்லாத காரணத்தால்
இவருக்கு பரிவுத் தொகை வழங்கப்பட்டது.
120 2009-10 மணவை முசுதபா 10 இலட்சம் சிறப்புத் தேர்வு
121 2010-11 பேரா. அ. மு. பரமசிவானந்தம் 10 இலட்சம்
122 2010-11 பேரா. அ. கிருட்டிணமூர்த்தி 10 இலட்சம்
123 2010-11 எசு. எம். கமால் 7 இலட்சம்
124 2010-11 ப. இராமசாமி 6 இலட்சம்
125 2010-11 இர. சீனிவாசன் 7 இலட்சம்
126 2010-11 வ. சு. செங்கல்வராய பிள்ளை 5 இலட்சம்
127 2010-11 வெள்ளியங்காட்டான் 3 இலட்சம்
128 2010-11 நெ. து. சுந்தரவடிவேலு
NDSundaravadivels.jpg
10 இலட்சம்
129 2010-11 சி. பாலசுப்பிரமணியன் 7 இலட்சம்
130 2010-11 மயிலை சிவமுத்து
மயிலை சிவமுத்து.jpg
10 இலட்சம்
131 2010-11 காழி சிவகண்ணுசாமி பிள்ளை 6 இலட்சம்
132 2010-11 கே. பி. நீலமணி 5 இலட்சம்
133 2010-11 கவிராச பண்டிதர் செகவீரபாண்டியன் 6 இலட்சம்
134 2010-11 அ. திருமலைமுத்துசுவாமி 7 இலட்சம்
135 2010-11 எசு. நவராசு செல்லையா 5 இலட்சம்
136 2010-11 பொ. திருகூடசுந்தரம்
PTKS 0.jpg
5 இலட்சம்
137 2010-11 சுந்தர சண்முகனார் 5 இலட்சம்
138 2010-11 தஞ்சை இராமையாதாசு
Thanjai Ramaiahdas.jpg
6 இலட்சம்
139 2010-11 தாராபாரதி 7 இலட்சம்
140 2010-11 அருதனக்குட்டி அடிகளார் 7 இலட்சம் இவர் மறைந்து 400 ஆண்டுகள் ஆனதால்
இவர்தம் மரபுரிமையர் விவரத்தை நீதிமன்றம் மூலம் அளிக்கும்படி
கோரிக்கை அளித்தவர்களிடம் வேண்டப்பட்டுள்ளது.
141 2010 டி. கே. சிதம்பரநாத முதலியார் 10 இலட்சம்
142 2010 ஜே. ஆர். இரங்கராஜூ 5 இலட்சம் 2009-10 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு,
16.7.2010ஆம் நாள் பரிவுத்தொகை வழங்கப்பட்டது.
143 2010 ஏ. கே. வேலன் 2 இலட்சம்
144 2010 கு. சீனிவாசன் 5 இலட்சம்
145 2011 கு. சா. கிருட்டிணமூர்த்தி 8 இலட்சம்
146 2011 கா. ம. வேங்கடராமையா 15 இலட்சம்
147 2011 சரோசா இராமமூர்த்தி
148 2011 அ. சீனிவாசன்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]