இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு
வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014
ஐக்கிய ராச்சியத்திடம் விடுதலை பெற்று ஸ்காட்லாந்து தனிநாடாவதா?
தேர்தல் முடிவுகள்
ஆம் / இல்லை வாக்குகள் வீதம்
X mark.svg இல்லை 20,01,926 55.3%
ஆம் 16,17,989 44.7%
செல்லுபடியான வாக்குகள் 36,19,915 99.91%
நிராகரிக்கப்பட்டவை 3,429 0.09%
மொத்த வாக்குகள் 36,23,344 100.00%
அளிக்கப்பட்ட வாக்கு வீதம் 84.59%
தேர்தல் தொகுதி 42,83,392
மாநகரசபைப் பகுதி வாரியாக முடிவுகள்
Scottish independence referendum results.png
  ஆம்
  இல்லை

இசுக்கொட்லாந்து விடுதலை பெற்ற தனிநாடாக இருக்க வேண்டுமா என்பதைக் கண்டறிவதற்கான பொது வாக்கெடுப்பு 2014 செப்டம்பர் 18 வியாழக்கிழமை நடைபெற்றது.[1] மொத்தம் 55.3% மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர்.[2] இசுக்கொட்லாந்தில் மொத்தமுள்ள 32 பிரதேசங்களில் டண்டி, கிளாஸ்கோ, நார்த் லங்கன்ஷெர் மற்றும் வெஸ்ட் டன்பர்ட்டன்ஷெர் ஆகிய நான்கு பிரதேசங்களில் ஆதரவாகவும், மீதமுள்ள பிரதேசங்களில் எதிராகவும் வாக்குகள் பதிவாகின.[3]

இசுக்கொட்லாந்து அரசுக்கும், ஐக்கிய இராச்சிய அரசுகளுக்கும் இடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் படி,[4] ஸ்காட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சட்டமூலம் 2013 மார்ச் 21 இல் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு,[5] 2013 நவம்பர் 14 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2013 டிசம்பர் 17 இல் இச்சட்டம் பிரித்தானிய முடியாட்சியால் அங்கீகாரம் பெற்றது.[6]

ஐக்கிய இராச்சியத்தின் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, பொது வாக்கெடுப்பிற்கான கேள்வி "ஸ்காட்லாந்து, விடுதலை பெற்று தனிநாடாவதா?" என்பதாகும். வாக்காளர்கள் ஆம் என்றோ இல்லை என்றோ தெரிவிக்க வேண்டும்.[7] ஸ்காட்லாந்தின் குடியுரிமை உள்ள 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் (4 மில்லியனுக்கும் அதிகமானோர்) இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். விடுதலைக்கான ஆதரவுக்கு சாதாரண பெரும்பான்மை (50% + 1 நபர்) மட்டுமே போதுமானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Scotland to hold independence poll in 2014 – Salmond". பிபிசி (பிபிசி). 10 January 2012. http://www.bbc.co.uk/news/uk-scotland-16478121. பார்த்த நாள்: 15 ஏப்ரல் 2014. 
  2. "Scottish referendum: Scotland votes no to independence". பிபிசி. 19 செப்டம்பர் 2014. http://www.bbc.com/news/uk-scotland-29270441. பார்த்த நாள்: 19 September 2014. 
  3. "பிரிவினைக்கு எதிர்ப்பு - ஸ்காட்லாந்து மக்கள் தீர்ப்பு". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (20 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 20 செப்டம்பர் 2014.
  4. "Agreement between the United Kingdom Government and the Scottish Government on a referendum on independence for Scotland" (PDF) (15 October 2012). பார்த்த நாள் May 2013.
  5. "Response to referendum consultation". Scotland.gov.uk. பார்த்த நாள் 11 October 2012.
  6. "Scottish Independence Referendum Bill". Scottish.parliament.uk. பார்த்த நாள் 2014-01-31.
  7. "Government accepts all Electoral Commission recommendations". பார்த்த நாள் 9 September 2014.

வெளி இணைப்புகள்[தொகு]