ஆ. மணவழகன்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
முனைவர் ஆ. மணவழகன் (Prof. Dr. A.MANAVAZHAHAN) தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர். சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் ஆறுமுகம்-பெரியக்காள்.
கல்வி
பள்ளிக் கல்வியைக் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், இளங்கலைத் தமிழ் இலக்கியத்தை வடசென்னிமலை (ஆத்தூர்) அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், முதுகலைத் தமிழ் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்புகளைத் திருச்சி தேசியக் கல்லூரியிலும், முனைவர் பட்ட ஆய்வினைச் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் பயின்றவர்.
பணி
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்-கணினி ஆராய்ச்சியாளராகவும்(2000-2004), சென்னை, டி.ஆர்.பி.சி.சி.சி இந்துக் கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராகவும் (2004-2005), சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் (2005-2011) பணியாற்றியவர். 2011-ஆம் ஆண்டு சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்த இவர், 2013ஆம் ஆண்டுமுதல் இப்புலத்தின் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தின்’ பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
பங்களிப்புகள்
[தொகு]ஆய்வு நூல்கள்
[தொகு]- 'பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை' (ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு), காவ்யா பதிப்பகம், 2005.
- 'சங்க இலக்கியத்தில் மேலாண்மை' (ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு), காவ்யா பதிப்பகம், 2007.
- 'தொலைநோக்கு' (ஆய்வு நூல்), அய்யனார் பதிப்பகம், 2010.
- 'பழந்தமிழர் தொழில்நுட்பம்' (ஆய்வு நூல்), அய்யனார் பதிப்பகம், 2010.
- தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2013.
- பதினெண்கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2014.
- பழந்தமிழ் நூல்களின் சமூகத் தொலைநோக்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2016.
- பழந்தமிழர் வாழ்வியலும் பன்முக ஆளுமையும் (இலக்கியம் – தொல்லியல் – மானுடவியல் அடிப்படையில்), ஐவனம் தமிழியல் ஆய்வு நடுவம், 2020.
- தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடும் புழங்குபொருள்களும், ஐவனம் தமிழியல் ஆய்வு நடுவம், 2020.
- ANCIENT TAMILS LIFESTYLE AND MULTIFACTORIAL MANAGEMENT (Based on: Literature – Archeology – Anthropology), Thamizhiyal Aivu naduvam, 2020.
கவிதைத் தொகுப்பு
[தொகு]1. 'கூடாகும் சுள்ளிகள்', அய்யனார் பதிப்பகம், 2010.
பதிப்பாசிரியர்:
[தொகு]1. இந்திய ஆட்சிப் பணி – தமிழ் முதன்மைத் தாள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
2. உதயணகுமார காவியம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - 2013
3. ஆதிசைவம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – 2013
4. தூய தமிழ்க் காவலர் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - 2013
5. மறைமலையடிகளாரின் பன்முகப் பார்வை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - 2014
6. கிறித்தவக் காப்பியங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - 2014
7. கிரேக்கக் காப்பியத்தில் மகாபாரதத் தமிழர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – 2015
8. சங்கத் தமிழ்க் குழவிக்குச் செவிலியாகும் சிவப்பிரகாசர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – 2016
9. புறநானுற்றில் பண்பாட்டியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – 2016
10. சங்க இலக்கியத்தில் பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் முறைகள், செந்திலதிபன் பதிப்பகம், 2018.
11. புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள் (புதின இலக்கியம்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2019.
12. புத்திலக்கியங்களில் தமிழ்ச் சமூக விழுமியங்கள் (கவிதை, சிறுகதை இலக்கியம்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2019.
13. ஐநூறு யுனானி மூலிகைகளும் மருத்துவ குணங்களும் (பா வடிவில்), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2021
14. ஐம்பெரும் பூதத்து இயற்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2021.
குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் தயாரிப்பு: www.thamizhiyal.com
[தொகு]தமிழ்நாடு அரசின் நிதிநல்கையுடன்,[1] பழந்தமிழரின் வாழ்வியல் சிறப்புகளை உணர்த்தும் பத்து ஆவணப் படங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும்
தயாரித்துள்ளார்.
1. பழந்தமிழர் வாழ்வியல்
2. தமிழர் நீர் மேலாண்மை
3. பழந்தமிழர் மருத்துவம்
4. பழந்தமிழர் போரியல்
5. பழந்தமிழர் ஆட்சித்திறன்
6. பழந்தமிழர் ஐந்திணை வாழ்வியல்
7. பழந்தமிழர் வேளாண் மேலாண்மை
8. பழந்தமிழர் கட்டடக் கலை
9. பழந்தமிழர் நெசவுத் தொழில்நுட்பம்
10. பழந்தமிழர் மரபுக் கலைகள்
ஆங்கிலத்தில்:
1. Ancient Tamilian’s Lifestyle of the Five Species of Land, Documentary Film, 2021.
2. Ancient Tamilian’s Agricultural Management, Documentary Film, 2021.
3. Ancient Tamilian’s Weaving Technology, Documentary Film, 2021.
4. Ancient Tamilian’s Architecture, Documentary film, 2021.
5. Conventional Arts of the Ancient Tamils, Documentary Film, 2021.
ஆய்வுக் கட்டுரைகள்
[தொகு]- தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான கருத்தரங்குகளில் 75-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.
கணினித் தமிழ்த் தொகுப்புகள்
[தொகு]- உயிரோவியம் (சங்க இலக்கியக் காட்சிகள்),
- காந்தள் (தமிழ் மொழிக் கையேடு),
- சொல்லோவியம் (படவிளக்க அகராதி) போன்ற கணினித்-தமிழ்த் தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளார்.
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் - உருவாக்கப் பணி:
[தொகு]சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள 'பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூட' உருவாக்கப்பணியில் அரசிற்குத் திட்டக் கருத்துரு வழங்கல், காட்சிப் பொருண்மை தேர்வு, காட்சி வடிவமைப்பு, காட்சிக்கூட அமைப்பு, ஒருங்கிணைப்பு, குறும்படம் தயாரிப்பிற்காக எழுத்துரு, நெறியாள்கை போன்ற பணிகளைச் சிறப்புடன் மேற்கொண்டார். தற்போது அதன் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
விருதுகள்
[தொகு]- குடியரசுத் தலைவரின் இளம் ஆய்வறிஞர் விருது: 2007 - 2008 ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவரின் 'இளம் ஆய்வறிஞர்' விருது (செம்மொழித் தமிழுக்கானது).
- இளம் படைப்பாளி: - 2004 ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தால் கவிதை இலக்கியத்திற்காக இளம் படைப்பாளியாகத் தேர்வு.
- 2013-ஆம் ஆண்டின் சிறந்த ஆய்வு நூலுக்கான தமிழ்நாடு அரசின் விருது, 13.04.15. நூல் - தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்
- வாழ்நாள் சாதனையாளர் விருது: நீதியரசர் முனைவர் வள்ளிநாயகம் அவர்களின் திருக்கரங்களால் வாழ்நாள் சாதனையாளர் விருது. சென்னை. 27.11.2016
- கவிச்செல்வர் விருது : திருவள்ளூர் தமிழ்க் கலை இலக்கியச் சங்கம், பூவிருந்தவல்லி. 25.06.2017
- புலியூர்க்கேசிகன் விருது: உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் இலக்கியப் பேரவை, சென்னை - 93. 29.7.2017
- நற்றிமிழ்ச் செல்வர் விருது : கபிலர் முத்தமிழ்ச் சங்கம், திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம். 27.08.2017
- இலக்கியச் செம்மல் விருது: தென்சென்னைத் தமிழ்ச் சங்கம், சென்னை. 03.12.2017
- 2015-ஆம் ஆண்டின் சிறந்த திறனாய்வு நூலுக்கான தமிழ்நாடு அரசின் விருது, 29.04.18, நூல்- பதினெண் கீழ்க்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும்.
- தமிழ்நாடு அரசின் ‘இளம் தமிழ் ஆய்வாளர்’ விருது, தமிழ்நாடு 50 - பொன்விழா, 30.09.18
- நற்றமிழ்க் காவலர் விருது: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – தமிழ்நாடு அரசு, இலக்கியப் பட்டறை - இலக்கியப் பேரவை, சென்னை. 13.10.2019.
- பண்பாட்டுக் காப்பாளர் விருது: தமிழ் மாநில சித்த வைத்தியச் சங்கம், தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் அறக்கட்டளை, தமிழ்ப் பரம்பரை சித்த மருத்துவப் பயிற்சி ஆய்விருக்கை – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு. 10.01.2020.
- டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, புதுவைத் தமிழ்ச் சங்கம், காஞ்சி கலைச்சங்கமம் இயல், இசை, நாடக, நாட்டுப்புறக் கலைக்கூடம், காஞ்சிபுரம். 08.03.2020.
வெளி இணைப்பு
http://pazhanthamizharvazhviyal.org/ பரணிடப்பட்டது 2021-05-05 at the வந்தவழி இயந்திரம்
https://www.facebook.com/manavazhahan
https://scholar.google.com/citations?user=mB0VOO4AAAAJ&hl=en